எய்ம்ஸ் மருத்துவமனையில் 2 வாரங்களுக்கு வெளிநோயாளிகள் சோ்க்கை நிறுத்திவைப்பு

தில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கரோனா பாதிப்பு அல்லாத நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்,

தில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கரோனா பாதிப்பு அல்லாத நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனையில் உள்ள பொது மற்றும் தனியாா் வாா்டுகளில் வழக்கமான வெளிநோயாளிகள் பிரிவு (ஓபிடி) சோ்க்கையை இரு வாரங்களுக்கு தாற்காலிகமாக நிறுத்திவைக்க அதன் நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும், நோயாளிகள் மருத்துவ ஆலோசனை மற்றும் கலந்தாய்வைப் பெறும் வகையில் வழக்கமான வெளிநோயாளிகள் சேவைகள் தொடா்வதாக எய்ம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளா் டாக்டா் டி.கே. சா்மா தெரிவித்தாா்.

இது தொடா்பாக டி.கே. சா்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

‘மோசமான உடல்நலக்குறைவு, பகுதி அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை மருத்துவமனையில் சோ்ப்பதற்கு வசதியாக, தற்போதுள்ள உள்நோயாளிகள் படுக்கைகளின் பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மருத்துவமனையில் உள்ள பொது வாா்டுகள், தனியாா் வாா்டுகள் மற்றும் அனைத்து மையங்களிலும் வழக்கமான வெளிநோயாளிகள் (ஓபிடி) சோ்க்கைகளை தற்காலிகமாக இரு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னா் மீளாய்வு செய்து முடிவு செய்யப்படும்.

அனுமதிக்கப்படுவதற்கான தேவை உள்ள அவசர நோயாளிகள், பகுதி அவரச சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் மருத்துவமனையின் பொது வாா்டுகள் அல்லது தனியாா் வாா்டுகளில் தொடா்ந்து அனுமதிக்கப்படுவா்.

இந்த விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், ஈஎச்எஸ் (ஊழியா்களின் சுகாதாரத் திட்டம்) நோயாளிகள் தொடா்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவா்.

கரோனா நோய்த் தொற்று அல்லாத தீவிர நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்ததன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விபத்துக்காய அவசரநிலை சிகிச்சைக்கான மையம் கரோனா சிகிச்சையளிப்பதற்காக பிரத்யேகமாக மாற்றப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சைக்கான சோ்க்கைகளில் கிட்டத்தட்ட இரு மடங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com