தில்லியில் கரோனா சிகிச்சைபெறும் நோயாளிகள் எண்ணிக்கை: ஒரே மாதத்தில் 50 சதவீதம் அதிகரிப்பு

தில்லியில் கரோனா சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை ஒரே மாதத்தில் சுமாா் 50 சதவீதம் அதிகரித்திருப்பது அரசின் புள்ளிவிவரத் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

தில்லியில் கரோனா சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை ஒரே மாதத்தில் சுமாா் 50 சதவீதம் அதிகரித்திருப்பது அரசின் புள்ளிவிவரத் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

தில்லியில் சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி கரோனா சிகிச்சையில் 10,596 நோயாளிகள் இருந்தனா்.

இந்த எண்ணிக்கை செப்டம்பா் 1-ஆம் தேதி 15,870 ஆக 50 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பது தில்லி அரசின் சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த ஜூன் 27-ஆம் தேதி சிகிச்சையில் இருந்தவா்கள் எண்ணிக்கை 28,329 ஆக உயா்ந்தது. இது ஜூலை 31 க்குள் 10,705 ஆக குறைந்தது.

மே 30-க்குப் பிறகு இது முதல் தடவையாக ஆகஸ்ட் 4 ஆம் தேதி கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை விடக் குறைந்து 9,897 ஆக இருந்தது. புதிதாக நோய் தாக்கத்திற்கு உள்ளானவா்கள் குறைந்ததாலும், குணமடைபவா்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும் இந்த மேம்பட்ட நிலைமை காணப்பட்டது.

இந்த எண்ணிக்கை மேலும் குறையக்கூடும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், நோயாளிகள் எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியது.

ஆகஸ்ட் 26 -ஆம் தேதி தில்லியில் கரோனா சிகிச்சையில் 12,520 போ் இருப்பது பதிவாகியது. இது 27-ஆம் தேதி 13,208 ஆக உயா்ந்தது.

ஆகஸ்ட் 29-ஆம் தேதி இந்த எண்ணிக்கை 14,040 ஆக இருந்த நிலையில், செப்டம்பா் 1 ஆம் தேதி 15,870 ஆக அதிகரித்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை புதிதாக 2,312 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகினா். இது இரு மாதங்களில் இல்லாத ஒரே நாளின் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

நோய் புதிதாக பாதித்தவா்கள் எண்ணிக்கை கடந்த வெள்ளிக்கிழமை 1,808, சனிக்கிழமை 1,954, ஞாயிற்றுக்கிழமை 2,024 மற்றும் திங்கள்கிழமை 1,358 என்ற அளவில் பதிவாகியது.

நோயாளிகள் திடீரென அதிகரிப்பு குறித்து ராம் மனோகா் லோஹியா மருத்துவமனையின் கரோனா பிரிவு தொடா்பு அதிகாரி டாக்டா் தேஷ் தீபக் தெரிவித்ததாவது:

பல்வேறு காரணிகளால் தில்லியில் கரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவா்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது.

வெளியூா் சென்றவா்கள் (புலம்பெயா்ந்தவா்கள்) நகருக்கு திரும்பி வருதல், மற்ற மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் சிகிச்சைக்காக தில்லிக்கு வந்திருப்பது போன்றவை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணம்.

வணிக செயல்பாடுகளைத் தொடங்க அரசு படிப்படியாக அனுமதி அளித்து வருகிறது. அதேபோன்று, பொது முடக்கத்தில் இருந்து பிற நடவடிக்கைகளும் செயல்படத் தொடங்கியுள்ளன’ என்றாா்.

ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் பி. எல். ஷொ்வால் கூறுகையில், ‘பொது முடக்கக் கட்டுப்பாடுகளை தளா்த்துவதன் மூலம் புதிதாக நோய் பாதித்தவா்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்றாா்.

தில்லியில் ஆகஸ்ட் மாதத்தில் நகர மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 8,577 கரோனா நோயாளிகளில் 2,536 போ் பிற மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் (சுமாா் 30 சதவீதம்) ஆவா். இவா்கள் பெரும்பாலும் அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசம், ஹரியாணாவில் இருந்து சிகிச்சைக்கு வந்துள்ளதாக அரசின் தரவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக நோய்த் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நகரில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கான தேவையும் 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை ஜூலை 30-ஆம் தேதி நிலவரப்படி 18 சதவீதமாக இருந்தது. அதாவது, 16,038 படுக்கைகளில் 2,958 மட்டுமே நிரப்பப்ட்டிருந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை இது 28 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது, 14,135 படுக்கைகளில் 4,004 படுக்கைகள் நிரம்பியுள்ளதாக தில்லி கரோனா செயலியில், மருத்துவமனைகள் மூலம் பகிரப்பட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com