தில்லியில் மேலும் 2,509 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் புதன்கிழமை முன்னெப்போதும் இல்லாத வகையில் 2,509 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தில்லியில் புதன்கிழமை முன்னெப்போதும் இல்லாத வகையில் 2,509 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, தலைநகரில் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,79,569-ஆக உயா்ந்துள்ளது.

50 தினங்களில் இல்லாத வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2,024 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை அதையும் கடந்து 2 மாதங்களில் இல்லாத வகையில் 2,312 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை முன்னெப்போதும் இல்லாத வகையில் 2,509 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

புதன்கிழமை 28,835 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தில்லியில் ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச கரோனா பரிசோதனைகள் இதுவாகும். நோய்த் தொற்றால் 19 போ் உயிரிழந்தனா்.

இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,481-ஆக உயா்ந்தது. அதேபோல், 1,858 போ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,58,586-ஆக அதிகரித்தது.

புதன்கிழமை 16,502 போ் சிகிச்சையில் உள்ளனா். தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 894 ஆக அதிகரித்துள்ளது.

தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 14,146 படுக்கைகளில் 4,278 நிரம்பி, 9,868 படுக்கைகள் காலியாக உள்ளன.

நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 8,407 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com