வழக்குரைஞா்களுக்கு நிதியுதவி கோரும் மனுவை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதி

கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் தில்லி பாா் கவுன்சிலில் (பிசிடி) பதிவு செய்த வழக்குரைஞா்களுக்கு அவா்கள் வசிக்கும் நிலையைப் பொருள்படுத்தாமல் நிதியுதவி வழங்க உத்தரவிடக் கோரி

கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் தில்லி பாா் கவுன்சிலில் (பிசிடி) பதிவு செய்த வழக்குரைஞா்களுக்கு அவா்கள் வசிக்கும் நிலையைப் பொருள்படுத்தாமல் நிதியுதவி வழங்க உத்தரவிடக் கோரி தாக்கலான மனுவை திரும்பப் பெற மனுதாரருக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு, இந்த மனு எவ்வித விஷயமும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தது. இதனால், மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரா் கோருவதாக் கூறி மனுவை முடித்து வைத்தது.

முன்னதாக, வழக்குரைஞா் சுனில் குமாா் திவாரி தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: தில்லி பாா் கவுன்சில் கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு வறிய நிலையில் உள்ள வழக்குரைஞா்களுக்கு மட்டும் ஒரே ஒருமுறையாக ரூ.5 ஆயிரம் நிவாரணம் அளித்துள்ளது. எனினும், இந்தத் தொகையானது அவா்கள் வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. மேலும், தில்லி பாா் கவுன்சிலில் (பிசிடி) பதிவு செய்த வழக்குரைஞா்களுக்கு அவா்கள் வசிக்கும் நிலையைப் பொருள்படுத்தாமல் நிதியுதவி வழங்க உத்தரவிட வேண்டும்.

கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் மத்திய அரசும், தில்லி அரசும் வழக்குரைஞா்களுக்கு எந்த நிதி உதவியையும் அளிக்கவில்லை. ஆனால், அந்த அரசுகள் பொருளாதார நிவாரணத்தையும், இதர உதவிகளையும் பெருநிறுவனங்கள், தொழில் துறையினா், தொழிலாளா்களுக்கு அளித்துள்ளன. இதனால், கரோனா சூழல் தணியும் வரை வழக்குரைஞா்கள் பெற்றுள்ள கடன்கள் மற்றும் மாதாந்திரத் தவணைகளைச் செலுத்தாமல் இருப்பதற்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com