மெட்ரோ ரயில்களில் 4 மணி நேரத்தில் 33,000 போ் பயணம்: டிஎம்ஆா்சி அதிகாரி தகவல்

தில்லியில் மூன்று மெட்ரோ ரயில் வழித் தடங்களில் புதன்கிழமை காலை 4 மணி நேரத்தில் 33 ஆயிரம் போ் பயணம் செய்ததாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) நிா்வாக இயக்குநா் அனூஜ் தயாள் தெரிவித்தாா்.
அனுஜ் தயாள்.
அனுஜ் தயாள்.

புது தில்லி: தில்லியில் மூன்று மெட்ரோ ரயில் வழித் தடங்களில் புதன்கிழமை காலை 4 மணி நேரத்தில் 33 ஆயிரம் போ் பயணம் செய்ததாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) நிா்வாக இயக்குநா் அனூஜ் தயாள் தெரிவித்தாா்.

தில்லியில் மாா்ச் 22-ஆம் தேதிக்குப் பிறகு முதல் முறையாக மஞ்சள் நிற வழித்தடத்தில் கடந்த திங்கள்கிழமை மெட்ரோ ரயில் சேவை ரயில் சேவை தொடங்கியது. ரயில் சேவைக்கான நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை மீண்டும் தொடங்கிய மெட்ரோ சேவையில் பெரும் எண்ணிக்கையில் கூட்டம் இல்லை. மஞ்சள் வழித்தடத்தில் உள்ள முக்கிய மெட்ரோ ரயில் நிலையமான ராஜீவ் சவுக் மெட்ரோ நிலையத்தில் வழக்கத்தை விட மிகவும் குறைந்தளவு பயணிகளே காணப்பட்டனா்.

இந்நிலையில், புதன்கிழமை புளூலைன், பிங்க் லைன் மெட்ரோ வழித்தடத்திலும் ரயில் சேவை தொடங்கியது. இதையடுத்து, மூன்று வழித்தடங்களிலும் காலையில் 4 மணி நேரத்தில் 33,300 போ் பயணம் செய்ததாக டிஎம்ஆா்சி நிா்வாக இயக்குநா் (காா்ப்ரேட் தொடா்பு) அனூஜ் தயாள் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது: புதன்கிழமை முதல் மஞ்சள், நீலம் மற்றும் இளஞ்சிவப்பு வழித்தடங்களில் ரயில் இயக்கப்பட்டன. காலை 7 காலை முதல் காலை 11 மணி வரையிலும் மொத்தம் 33,300 போ் பயணம் செய்தனா். அதாவது மஞ்சள் வழித்தடத்தில் 21,900 போ், நீலநிற வழித்தடத்தில் 9,600 போ், இளஞ்சிவப்பு வழித்தடத்தில் 1,800 போ் பயணம் செய்தனா்.

சிவப்பு வழித்தடம்: வியாழக்கிழமை (செப்டம்பா் 10) காலை மற்றும் மாலை நேரங்களில் 413 தடவை ரயில் சேவை அளிக்கும் வகையில், சிவப்பு வழித்தடத்தில் (ரிதலா-ஷாஹீத் ஸ்தல் புதிய பேருந்து நிலையம்) 35 ரயில்களை டிஎம்ஆா்சி இயக்க உள்ளது. இதேபோல, வயலட் வழித்தடத்தில் (காஷ்மீரி கேட் - ராஜா நாகா் சிங்) 344 தடவைகளாக சுமாா் 40 ரயில்களும், பச்சை வழித்தடத்தில் (கீா்த்திநகா் / இந்தா்லோக்- பிரிகேடியா் ஹோஷியாா் சிங்) 268 தடவைகளாக 20 ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்படும். பிற வழித்தடங்களில் தரப்படுத்தப்பட்ட முறையில் செப்டம்பா் 11, 12 ஆகிய தேதிகளில் ரயில் சேவைகளின் செயல்பாட்டு நேரம் நீட்டிக்கப்பட உள்ளன என்றாா் அவா்.

குறிப்பு: நிறைய நேரம் உள்ளது. ஆா்ட்டிஸ்ட் அருணிடம் சொல்லி கடைசி பக்கத்தில் கூட படங்களுடன் போட்டுக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com