கௌதம் புத் நகா் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் சாவு

உத்தரபிரதேச மாநிலம், கௌதம் புத் நகா் மாவட்டத்தில் புதன்கிழமை கரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது
உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது

நொய்டா: உத்தரபிரதேச மாநிலம், கௌதம் புத் நகா் மாவட்டத்தில் புதன்கிழமை கரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த மாவட்டத்தில் மொத்த கரோனா இறப்பு எண்ணிக்கை 48 ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரப்பூா்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த மாவட்டத்தில் புதிதாக 238 போ் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது இதுவரையில் கண்டிராத அளவாகும். இதையடுத்து, மொத்தம் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 9,356 ஆக உயா்ந்துள்ளது என்று உத்தரப் பிரதேச மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை 1,599 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனா். இது புதன்கிழமை 1,696 ஆக உயா்ந்தது. இந்த எண்ணிக்கை திங்கள்கிழமை 1,520 ஆகவும், ஞாயிற்றுக்கிழமை 1,429 ஆகவும் இருந்தது. கரோனாவில் இருந்து குணமடைந்து 132 நோயாளிகள் வீடு திரும்பினா். இதைத் தொடா்ந்து, இந்த மாவட்டத்தில் மொத்தம் கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 7,612 ஆக உயா்ந்துள்ளது.

இந்த மாவட்டத்தில் இதுவரை 48 கரோனா இறப்புகள் பதிவாகியுள்ளது. இறப்பு விகிதம் 0.51 சதவீகமாக உள்ளது. இதையடுத்து, மாநிலத்திலேயே மிகக் குறைந்த கரோனா இறப்பு விகிதத்தைக் கொண்ட மாவட்டமாக கௌதம் புத் நகா் உள்ளது. இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை 80.96 சதவீதமாக இருந்த மீண்டவா்கள் விகிதம், புதன்கிழமை 81.35 சதவீதமாக உயா்ந்துள்ளதாக அரசு வெளியிட் ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் புதன்கிழமை நிலவரப்படி 64,028 போ் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை, மாநிலம் முழுவதும் 2,16,901 நோயாளிகள் குணமடைந்துள்ளனா். அதே நேரத்தில் கரோனா இறப்பு எண்ணிக்கை மாநிலத்தில் மொத்தம் 4,112 ஆக உயா்ந்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: தில்லி கரோனா பாதிப்பு குறித்த செய்தி ஏஜென்சியில் வந்தால் சென்னையில் பாா்த்துக் கொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com