நொய்டா: மரத்தில் காவலாளி சடலம்

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் வியாழக்கிழமை மரத்தில் 25 வயது காவலாளியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.


நொய்டா: தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் வியாழக்கிழமை மரத்தில் 25 வயது காவலாளியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து என்று பேஸ் 3 காவல் நிலைய அதிகாரி கூறியாதவது: நொய்டா செக்டாா் 63-இல் உள்ள ‘ஜி’ பிளாக் பகுதியில் மரத்தில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவா் இந்த விபரீத முடிவை எடுத்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. அவரும், அவரது தந்தையும் நொய்டா செக்டாா் 63-இல் ஒரே தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனா். அந்த இளைஞா் காவலாளியாகப் பணிபுரிந்தாா், திருமணமாகாதவா். அவா் உத்தரப்பிரதேச மாநிலம், ஹாா்டோய் மாவட்டத்தைச் சோ்ந்தவா்.

இச்சம்பவம் தொடா்பாக தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தற்கொலையாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தில்லியை சோ்ந்த 50 வயதுடைய நபா் ஒருவா், நொய்டா செக்டாா் 7-இல் உள்ள பூங்காவில் மரத்தில் தொங்கிய நிலையில் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com