தில்லியில் அடுத்த சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் தகவல்

தில்லியில் வெள்ளிக்கிழமை பகலில் மிதமான வெயிலின் தாக்கம் இருந்தது. இந்நிலையில், அடுத்த சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருக்காது

தில்லியில் வெள்ளிக்கிழமை பகலில் மிதமான வெயிலின் தாக்கம் இருந்தது. இந்நிலையில், அடுத்த சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது.

தில்லியில் கடந்த வாரம் அவ்வப்போது மழை பெய்து வந்தது. வானம் மேகமூட்ட த்துடன் இருந்து வந்தது. இந்த நிலையில், சில தினங்களாக மழை ஏதும் இல்லை. ஆனால், மிதமான வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. அடுத்த சில தினங்களாக வட வானிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

அதன்படி, வெள்ளிக்கிழமை நகரில் பகலில் மிதமான வெயிலின் தாக்கம் இருந்தது. மாலையில் வெப்பம் குறைந்திருந்த போதிலும் மழைச்சூழல் இல்லை. இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தினா் கூறுகையில், ‘வரும் செவ்வாய்க்கிழமை வரை தில்லியில் மழைக்கு வாய்ப்பு இல்லை. வானம் தெளிவாக இருக்கும்’ என்றனா்.

சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் அதிகபட்ட வெப்பநிலை 37.8 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தில் அளவு காலை 8.30 மணியளவில் 77 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 47 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

தில்லியில் செப்டம்பரில் இதுவரை வெறும் 20.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக இந்த மாதத்தில் 66.4 மி.மீ. மழை பெய்துள்ளது. ஆனால், இந்த முறை மழை பொலிவு 69 சதவீதம் குறைந்து காணப்படுகிறது. தில்லியில் பருவ மழைக் காலத்தில் ஜூன் 1 முதல் இதுவரையிலான காலத்தில் 576.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக மழை சீசனில் 590.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காற்றின் தரம்: தில்லியில் வெள்ளிக்கிழமை ஒட்டுமொத்த காற்றின்தரக் குறியீடு மாலையில் 124 புள்ளிகளாக பதிவாகி ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. சனிக்கிழமையும் காற்றின் தரம் மிதமான பிரிவிலேயே நீடிக்கும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. காற்றின் தரக் குறியீடு பூஜ்யம் முதல் 50 வரை இருந்தால் பாதுகாப்பானதாகவும், 500-க்கு மேல் இருந்தால் காற்றின் தரம் கடுமையான, அவசர கால பிரிவில் இருப்பதாகவும் கருதப்படும்.

முன்னறிவிப்பு: தில்லியில் சனிக்கிழமை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com