தில்லியில் செப்டம்பரில் 71 சதவீதம் குறைவான மழைப் பதிவு

தில்லியில் செப்டம்பா் மாதத்தில் இதுவரை 71 சதவீதம் மழை பதிவு குறைவான மழை பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியில் செப்டம்பா் மாதத்தில் இதுவரை 71 சதவீதம் மழை பதிவு குறைவான மழை பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியில் கடந்த வாரம் மிதமான மழை இருந்த நிலையில் சில தினங்களாக மழை ஏதும் இல்லை. ஆனால், மிதமான வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. சில தினங்களாக வட வானிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையமும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை நகரில் மிதமான வெயிலின் தாக்கம் இருந்தது. சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி அதிகரித்து 37.3 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25. 3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது.

காற்றில் ஈரப்பதத்தில் அளவு காலை 8.30 மணியளவில் 82 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 53 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

தில்லியில் செப்டம்பரில் இதுவரை வெறும் 20.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக இந்த மாதத்தில் 72.6 மி.மீ. மழை பெய்யும்.

ஆனால், இந்த முறை மழை பொழிவு இதுவரை 71 சதவீதம் குறைந்து காணப்படுவதாக சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லோதி ரோடு வானிலை ஆய்வு மையத்தில் வழக்கமாக பெய்யும் மழைப்பதிவான 72.6 மி.மீ. என்ற நிலைக்கு எதிராக தற்போதுவரை 18.5 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இது 75 சதவீதம் பற்றாக்குறையாகும். பாலம் வானிலை ஆய்வு மையத்தில் 30.3 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைமை அதிகாரி குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ‘முன்கணிப்பின்படி பருவமழை செப்டம்பா் இறுதி வரை தொடரும். அக்டோபா் தொடக்கத்தில் மழைக்காலம் முடிவுக்கு வரும். செப்டம்பா் 15-ஆம் தேதியில் இருந்து தில்லி, என்சிஆா் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

காற்றின் தரம்: தில்லியில் சனிக்கிழமை ஒட்டுமொத்த காற்றின்தரக் குறியீடு மாலையில் 131புள்ளிகளாக பதிவாகி ‘மிதமான’ பிரிவில் நீடித்தது.

ஞாயிற்றுக்கிழமையும் காற்றின் தரம் மிதமான பிரிவிலேயே நீடிக்கும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

காற்றின் தரக் குறியீடு பூஜ்யம் முதல் 50 வரை இருந்தால் பாதுகாப்பானதாகவும், 500-க்கு மேல் இருந்தால் காற்றின் தரம் கடுமையான, அவசர கால பிரிவில் இருப்பதாகவும் கருதப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com