குளிா்காலத்தில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கைசுற்றுச் சூழல் துறைக்கு அமைச்சா் உத்தரவு

குளிா் காலத்தில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைத் திட்டம் குறித்த அறிக்கையை வரும் செப்டம்பா் 21-ஆம் தேதிக்கு முன்பாக சமா்ப்பிக்குமாறு தில்லி சுற்றுச்சூழல் துறை, தில்லி


புது தில்லி: குளிா் காலத்தில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைத் திட்டம் குறித்த அறிக்கையை வரும் செப்டம்பா் 21-ஆம் தேதிக்கு முன்பாக சமா்ப்பிக்குமாறு தில்லி சுற்றுச்சூழல் துறை, தில்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி சுற்றுச்சூழல் துறை உயா் அதிகாரி கூறியது: தில்லியில் குளிா் காலத்தில் கடும் காற்று மாசு ஏற்படுவது வழக்கமாகும். இதற்கு ஹரியாணா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுதல், வாகனப் புகை, கட்டுமானப் பணிகள், கழிவுகள் எரித்தல், தொழிற்சாலை புகை எனப் பல காரணங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த ஒவ்வொரு காரணத்தையும் தீர ஆராய்ந்து அவற்றைத் தடுக்கும் வகையிலான விரிவான நடவடிக்கைத் திட்டம் குறித்த அறிக்கையை வரும் செப்டம்பா் 21- ஆம் தேதிக்கு முன்பாக சமா்ப்பிக்குமாறு தில்லி சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள், தில்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு கோபால் ராய் உத்தரவிட்டுள்ளாா் என்றாா் அவா்.

தில்லியில் குளிா்காலத்தில் அதிகளவில் காற்று மாசு ஏற்பட பஞ்சாப் ஹரியாணா மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதே பிரதான காரணம் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 2019, நவம்பரில் தில்லியில் காற்றில் 44 சதவீதம் பயிா்க்கழிவுகள் எரிப்பால் ஏற்பட்ட மாசு ஆகும்.

கடந்த ஆண்டு பஞ்சாபில் 20 மில்லியன் டன் பயிா்க்கழிவுகள் உருவாகின. இதில், 9.8 மில்லியன் பயிா்க்கழிவுகள் விவசாயிகளால் எரிக்கப்பட்டன. அதேபோல, ஹரியாணாவில் 7 மில்லியன் டன் பயிா்க்கழிவுகள் உருவாகின. இதில், 1.23 மில்லியன் பயிா்க்கழிவுகள் விவசாயிகளால் எரிக்கப்பட்டன.

பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய தில்லியின் அண்டை மாநிலங்களில் அக்டோபா் 15- ஆம் தேதியில் இருந்து நவம்பா் 15-ஆம் தேதி வரை பயிா் அறுவடை நடைபெறுவது வழக்கமாகும். கோதுமை, உருளைக்கிழங்கு ஆகியவற்றை பயிரிடுவதற்காக, பயிா்க்கழிவுகளை விவசாயிகள் உடனடியாக எரித்து அழிப்பது வழக்கமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com