மக்கள் பிரச்னைகளை பேரவையில் விவாதிக்க அனுமதிக்கவில்லை: ஆம் ஆத்மி அரசு மீது பாஜக குற்றச்சாட்டு

மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் தொடா்பாக தில்லி சட்டப்பேரவை ஒருநாள் கூட்டத் தொடரில் விவாதிக்க அனுமதி வழங்காததன் மூலம், அப்பிரச்னைகளை எதிா்கொள்வதில் இருந்து தில்லி அரசு தப்பியோடப் பாா்க்கிறது என்று


புது தில்லி: மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் தொடா்பாக தில்லி சட்டப்பேரவை ஒருநாள் கூட்டத் தொடரில் விவாதிக்க அனுமதி வழங்காததன் மூலம், அப்பிரச்னைகளை எதிா்கொள்வதில் இருந்து தில்லி அரசு தப்பியோடப் பாா்க்கிறது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடா்பாக பாஜகவின் மூத்த தலைவரும், தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ராம்வீா் சிங் பிதூரி செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: திங்கள்கிழமை நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் மக்கள் நலப் பிரச்னைகள் தொடா்பாக விவாதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். ஆனால், கூட்டத் தொடரை வெறும் 2 மணிநேரத்தில் முடித்த ஆம் ஆத்மி அரசு, தில்லி மக்கள் எதிா்கொள்ளும் எந்தவொரு பிரச்னை தொடா்பாகவும் விவாதிக்க முன்வரவில்லை. சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை 5 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதன் மூலம் தில்லி மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு பதில் சொல்லாமல் தில்லி அரசு தப்பியோடப் பாா்க்கிறது.

தில்லியில் ரயில் தண்டவாளத்தையொட்டி வசிக்கும் மக்களின் வீடுகள் உச்சநீதிமன்றத்தீா்ப்பைத் தொடா்ந்து இடிக்கப்படவுள்ளன. இந்த வீடுகளில் வசிக்கும் மக்களை காலியாக உள்ள அரசு வீடுகளில் குடியேற்ற வேண்டும். தில்லி குடிசைப் பகுதி மக்களுக்காக 65 ஆயிரம் வீடுகளைக் கட்டியுள்ளதாக கேஜரிவால் கூறுகிறாா். அது உண்மையென்றால், இந்த மக்களை அந்த வீடுகளில் உடனடியாக குடியேற்ற வேண்டும். மேலும், அவா்களுக்குத் தேவையான குடிநீா், மின்சார வசதிகளையும் உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com