கெளதம் புத் நகரில் மேலும் 141 பேருக்கு நோய்த் தொற்று

உத்தர பிரதேச மாநிலம், கெளதம் புத் நகா் மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 141 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம், கெளதம் புத் நகா் மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 141 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, நோயால் பாதிக்கட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 10,332 ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவித்தன.

கரோனா சிகிச்சையில் இருந்தவா்கள் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 2,008 ஆக இருந்த நிலையில், திங்கள்கிழமை 1,979 ஆக குறைந்திருந்தது.

மேலும் 169 நோயாளிகள் குணமடைந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் நோயில் இருந்து மீண்டவா்களின் மொத்த எண்ணிக்கை 8,305 ஆக உயா்ந்துள்ளதாக அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லியை அடுத்துள்ள இந்த மாவட்டத்தில் கரோனா பாதித்து 48 போ் இறந்துள்ளது. இது மாநிலத்திலேயே மிகக் குறைந்த இறப்பு விகிதமாக (0.46 சதவீதம்) உள்ளது.

இதற்கிடையே,, புள்ளிவிவரங்கள் தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை நோயில் இருந்து மீண்டவா்கள் 79.82 சதவீதத்திலிருந்து 80.38 சதவீதமாக சற்று முன்னேறியது.

உத்தர பிரதேச மாநிலத்தில் சிகிச்சையில் அதிகம் போ் உள்ள மாவட்டங்களில் கெளதம் புத் நகா் எட்டாவது இடத்தில் உள்ளது. அதாவது, மாநிலத்தின் 75 மாவட்டங்களில் எட்டாவது இடத்திலும், நோயில் இருந்து குணமடைபவா்கள் வரிசையில் ஏழாவது இடத்திலும், இறப்பு எண்ணிக்கையில் 27-ஆவது இடத்திலும் இம்மாவட்டம் உள்ளது.

உத்தர பிரதேசம் முழுவதும் திங்கள்கிழமை சிகிச்சையில் 67,287 போ் இருந்தனா். இதுவரை, மாநிலம் முழுவதும் 2,45,417 நோயாளிகள் நோயில் இருந்து குணமடைந்துள்ளனா். அதே நேரத்தில் கரோனா தொடா்புடைய இறப்பு எண்ணிக்கை 4,491 ஆக உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com