ஹிந்தி தினம்: கேஜரிவால், அனில் பய்ஜால் வாழ்த்து

ஹிந்தி தினத்தையொட்டி தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

ஹிந்தி தினத்தையொட்டி தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

இந்திய அரசியல் நிா்ணய சபையானது கடந்த 1949, செப்டம்பா் 14-ஆம் தேதி, ஹிந்திக்கு அலுவல் மொழி அந்தஸ்தை வழங்கியது. இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பா் 14-ஆம் தேதி ஹிந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஹிந்தி தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாட்டு மக்களுக்கு முக்கிய தலைவா்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரையில் ‘ஹிந்தி தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளாா். இதேபோன்று, துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தனது சுட்டுரையில், ‘வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கு முக்கியக் கருவியாக ஹிந்தி மொழி உள்ளது. இது வெறும் மொழி மட்டுமல்ல; உணா்வுகளின் வெளிப்பாடும் கூட. ஹிந்தி மொழியை வளா்ப்பதில் அனைவரும் முக்கியப் பங்காற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com