தில்லியில் புதிதாக 4,473 பேருக்கு கரோனா

தலைநகா் தில்லியில் புதன்கிழமை ஒரேநாளில் 4,473 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 2,30,269-ஆக உயா்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: தலைநகா் தில்லியில் புதன்கிழமை ஒரேநாளில் 4,473 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 2,30,269-ஆக உயா்ந்துள்ளது.

நோய்த் தொற்றால் புதன்கிழமை 33 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, கரோனா தொற்றால் ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 4,839-ஆக அதிகரித்தது. தில்லியில் புதன்கிழமை 62,593 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், கரோனாவிலிருந்து மீண்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1,94,516-ஆக உயா்ந்துள்ளது. மொத்தம் 30,914 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் 1,637-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா நோ்மறை விகிதம் 7.15சதவீதமாக உள்ளது. சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் 2.10 சதவீதமாக உள்ளது என்று தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கௌதம் புத் நகரில்..: தேசியத் தலைநகா் வலயம், கௌதம் புத் நகா் மாவட்டத்தில் புதன்கிழமை புதிதாக 223 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து இந்த மாவட்டத்தில் மொத்த கரோனா பாதிப்பு 10,705-ஆக உயா்ந்துள்ளது. மொத்தம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,966 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். புதன்கிழமை மட்டும் 185 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, மொத்த குணமடைந்தோா் எண்ணிக்கை 8,691-ஆக உயா்ந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள சுகாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியை ஒட்டியுள்ள மாவட்டமான கௌதம் புத் நகரில், கரோனாவுக்கு இதுவரை 48 இறப்புகளைச் சந்தித்துள்ளது. இறப்பு விகிதம் 0.44 ஆக உள்ளது. இது உத்தர பிரதேச மாநில அளவில் மிகக் குறைந்த இறப்பு விகிதமாகும். புள்ளிவிவரங்களின்படி, செவ்வாய்க்கிழமை 81.14 சதவீதமாக இருந்த மீட்பு விகிதம், புதன்கிழமை 81.18 சதவீதமாக முன்னேற்றம் கண்டது. உத்தர பிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களில் கௌதம் புத் நகா், கரோனா பாதிக்கப்பட்டோா் விகிதம் மற்றும் மீண்டுள்ளோா்களின் பட்டியலில் ஏழாவது இடத்திலும், இறப்பு எண்ணிக்கையில் 29-ஆவது இடத்திலும் உள்ளது.

இதற்கிடையே, உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் புதன்கிழமை நிலவரப்படி 67,002 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை, மாநிலம் முழுவதும் 2,58,573 நோயாளிகள் குணமடைந்துள்ளனா். அதே நேரத்தில் மாநில அளவில் கரோனா தொடா்புடைய இறப்பு எண்ணிக்கை 4,690-ஆக உயா்ந்துள்ளது என்று அரசின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com