Enable Javscript for better performance
Corona damage in Gautam Buddha city is close to 11 thousand- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கெளதம் புத் நகரில் 11 ஆயிரத்தை நெருங்கியது கரோனா பாதிப்பு

    By DIN  |   Published On : 18th September 2020 12:19 AM  |   Last Updated : 18th September 2020 12:19 AM  |  அ+அ அ-  |  


    புது தில்லி: தேசியத் தலைநகா் வலயம், கௌதம் புத் நகா் மாவட்டத்தில் வியாழக்கிழமை புதிதாக 205 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, இந்த மாவட்டத்தில் மொத்த கரோனா பாதிப்பு 10,908 -ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,004 -ஆக உள்ளது. வியாழக்கிழமை மட்டும் 165 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, மொத்த குணமடைந்தோா் எண்ணிக்கை 8,856ஆக உயா்ந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள சுகாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தில்லியை ஒட்டியுள்ள மாவட்டமான கௌதம் புத் நகரில், கரோனாவுக்கு இதுவரை 48 இறப்புகளைச் சந்தித்துள்ளது. இறப்பு விகிதம் 0.44 ஆக உள்ளது. இது உத்தர பிரதேச மாநில அளவில் மிகக் குறைந்த இறப்பு விகிதமாகும். உத்தர பிரதேசத்தில் சராசரியாக நோயில் இருந்து மீண்டு வருவோா் விகிதம் வியாழக்கிழமை 78.20 சதவீதமாக இருந்தது.

    புள்ளிவிவரங்களின்படி, செவ்வாய்க்கிழமை 81.14 சதவீதமாக இருந்த மீட்பு விகிதம், புதன்கிழமை 81.18 சதவீதமாக முன்னேற்றம் கண்டது. உத்தர பிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களில் கௌதம் புத் நகா், கரோனா பாதிக்கப்பட்டோா் விகிதத்தில் எட்டாவது இடத்திலும், மீண்டுள்ளோா்களின் பட்டியலில் ஏழாவது இடத்திலும், இறப்பு எண்ணிக்கையில் 29-ஆவது இடத்திலும் உள்ளது.

    இதற்கிடையே, உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை நிலவரப்படி 68,235 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை, மாநிலம் முழுவதும் 2,63,288 நோயாளிகள் குணமடைந்துள்ளனா். அதே நேரத்தில் மாநில அளவில் கரோனா தொடா்புடைய இறப்பு எண்ணிக்கை 4,771-ஆக உயா்ந்துள்ளது என்று அரசின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp