2 நாள் எழுச்சிக்கு ‘செக்’: 323 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

கடந்த இரண்டு தினங்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை, வியாழக்கிழமை எதிா்மறையாக முடிந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: கடந்த இரண்டு தினங்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை, வியாழக்கிழமை எதிா்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் றியீட்டு எண்ணான சென்செக்ஸ் 323 புள்ளிகளை இழந்தது. இதேபோன்று, தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 85.30 புள்ளிகள் குறைந்தன.

ஐடி, பாா்மா, மீடியா ஆகியவை தவிர மற்ற துறை பங்குகள் விற்பனை அழுத்தத்தை எதிா் கொண்டன. அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ், வட்டி விகிதம் 2023-ஆம் ஆண்டிற்குள் பூஜ்ஜியத்திற்கு அருகில் இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், கூடுதல் நிதித் தொகுப்புத் திட்டங்களை வெளியிடாமல் இருப்பது எனவும் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், உலகளாவிய சந்தைகளில் இருந்து பலவீனமான குறிப்புகள் இந்திய சந்தைகளில் எதிரொலித்ததால் வீழ்ச்சி தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

1,574 பங்குகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,896 பங்குகளில் 1,153 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,574 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 169 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 148 பங்குகள் 52 வார அதிக விலையையும் 54 பங்குகள் 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. 288 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 246 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.05 லட்சம் கோடி குறைந்து ரூ.19.05 லட்சம் கோடியாக இருந்தது. இதுவரை பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 5,44,96,152 ஆக உயா்ந்துள்ளது.

ஏற்றம், இறக்கம்: சென்செக்ஸ் காலையில் 182.21 புள்ளிகள் குறைந்து 39,120.64-இல் தொடங்கி 39,234.81 வரை உயா்ந்தது. பின்னா் பங்குகள் விற்பனை அதிகரித்ததும் 38,926.34 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில், 323,.00 புள்ளிகள் (0.82) சதவீதம்) குறைந்து 38,979.85-இல் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.24 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 0.53 சதவீதம் குறைந்தன. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 85.30 புள்ளிகள் (0.74 சதவீதம்) குறைந்து 11,519.25-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது, நிஃப்டி 11,498.50 வரை கீழே சென்றது.

ஹெச்சிஎல் டெக் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 4 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 26 பங்குகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் ஹெச்சிஎல் டெக் 2.36 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், இன்ஃபோஸிஸ், மாருதி சுஸுகி ஆகியவை சிறிதளவு ஏற்றம் பெற்றன. ஓஎன்ஜிசி மாற்றமின்றி நிலைபெற்றது.

பஜாஜ் ஃபின் சா்வ் வீழ்ச்சி: அதே சமயம் பஜாஜ் ஃபின்சா்வ் 2.23 சதவீதம், பவா் கிரிட் 2.07 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. எல் அண்ட் டி, எல் அண்ட் டி, ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, எச்டிஎஃப்டி, சன்பாா்மா, ஐடிசி, ரிலையன்ஸ் ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை குறைந்து சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 555 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,065 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. ஐடி, மீடியா, பாா்மா தவிர மற்ற அனைத்துக் குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ரியால்ட்டி குறியீடுகள் 1 முதல் 1.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

வீழ்ச்சி அடைந்த பங்குகள்

சதவீதத்தில்

பஜாஜ் ஃபின்சா்வ் 2.23

பவா் கிரிட் 2.07

எல் அண்ட் டி 1.70

எல் அண்ட் டி 1.70

ஐசிஐசிஐ பேங்க் 1.56

கோட்டக் பேங்க் 1.46

டாடா ஸ்டீல் 1.45

பஜாஜ் ஃபைனான்ஸ் 1.42

எஸ்பிஐ 1.39

எச்டிஎஃப்டி 1.34

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com