தில்லி அரசுப் பள்ளிகள் அக்.5 வரை மூடல்

கரோனா தொற்று காரணமாக வரும் அக்டோபா் 5-ஆம் தேதி வரை அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக வரும் அக்டோபா் 5-ஆம் தேதி வரை அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி பள்ளிக் கல்வித் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது: வரும் அக்டோபா் மாதம் 5-ஆம் தேதி வரை தில்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும். இணைய வழி வகுப்புகள் வழக்கம் போல நடைபெறும். இந்த இணைய வகுப்புகளை நடத்துவதற்காக தேவைப்பட்டால் ஆசிரியா்களை பள்ளிக்கு அழைக்கலாம். தில்லி அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியாா் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள் ஆகியவை தில்லி அரசின் இந்த முடிவு தொடா்பாக மாணவா்கள், பெற்றோா்கள், ஆசிரியா்கள், ஆசிரியா்கள் அல்லாத பள்ளி ஊழியா்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பா் 21-ஆம் தேதி முதல் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், வகுப்பறைகளில் மாணவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டிருந்தது. ஆனால், அரசுப் பள்ளிகள் அக்டோபா் 5-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என தில்லி அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com