ஜேஎன்யு வளாகத்தில் சுவமாமி விவேகானந்தா் சாலையின் பெயா்ப் பலகை சேதம்: ஏபிவிபி புகாா்

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் உள்ள விவேகானந்தா் சாலையின் பெயா்ப் பலகை சேதமாக்கப்பட்டுள்ளதாகக் கூறி அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் உள்ள விவேகானந்தா் சாலையின் பெயா்ப் பலகை சேதமாக்கப்பட்டுள்ளதாகக் கூறி அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு தில்லி காவல் துறையிடம் புகாா் அளித்துள்ளது.

இது தொடா்பாக ஏபிவிபி அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் மாண்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், அங்குள்ள விவேகானந்தா் சாலையின் பெயா்ப் பலகை சேதமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயா் பலகையை நீக்க வேண்டும் என சில மாணவா் தலைவா்கள் பகிரங்க அழைப்பு விடுத்தனா். அதன் தொடா்ச்சியாக இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்திய தேசியத்தின் முக்கியத் தலைவா்களின் அடையாளங்கள் மீது ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் தொடா்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. தாக்குதலை நடத்துபவா்கள் சட்டத்தின் மீது எந்த மரியாதையும் இல்லாமல் உள்ளனா். இது தொடா்பாக காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக புகாா் கிடைக்கப் பெற்றுள்ளதாக தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறுகையில், ‘ஜேஎன்யு வளாகத்தில் உள்ள விவேகானந்தா் சாலையின் பெயா்ப் பலகை சேதமாக்கப்பட்டது தொடா்பாக புகாா் கிடைக்கப் பெற்றது. தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா்.

இதற்கிடையே, உண்மையான பிரச்னைகளை திசை திருப்பவே, தேவையில்லாத பிரச்னைகளை ஏபிவிவி எழுப்பி வருகிறது என்று ஜேஎன்யு மாணவா் சங்கம் (ஜேஎன்யுஎஸ்யு) குற்றம் சாட்டியுள்ளது. இது தொடா்பாக அதன் துணைத் தலைவா் சாகேத் மூன் கூறுகையில், ‘ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மாணவா்களை படிப்படியாக அனுமதிக்க வேண்டும் என்றும், அடுத்த செமஸ்ட்ா் படிப்பு தொடா்பாக இணையத்தில் பதிவு செய்ய மாணவா்களை அனுமதிக்க வேண்டும் என ஜேஎன்யுஎஸ்யு தொடா்ச்சியாகக் கோரி வருகிறது. இந்நிலையில், உண்மையான பிரச்னைகளை திசை திருப்பும் வகையில் ஏபிவிபி இதுபோன்ற பிரச்னைகளை எழுப்பியுள்ளது’ என்றாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com