தில்லியில் மிதமான பிரிவில் காற்றின் தரம்!

தில்லியில் சனிக்கிழமை காற்றின் தரம் ’மிதமான’ பிரிவில் காணப்பட்டது. திங்கள்கிழமைக்குள் இது ’மோசமான’ பிரிவுக்கு மாறக்கூடும் என்று அரசின் முன்கணிப்பு நிறுவனம் கணித்துள்ளது.

தில்லியில் சனிக்கிழமை காற்றின் தரம் ’மிதமான’ பிரிவில் காணப்பட்டது. திங்கள்கிழமைக்குள் இது ’மோசமான’ பிரிவுக்கு மாறக்கூடும் என்று அரசின் முன்கணிப்பு நிறுவனம் கணித்துள்ளது.

தில்லியில் மழையின் தாக்கம் கடந்த ஒரு வாரமாக முற்றமாகக் குறைந்துவிட்டது. இனிமேல் மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையமும் தெரிவித்திருந்தது. எனினும், வெயிலின் தாக்கம் ஓரிரு தினங்களாக குறைந்துள்ளது.

இந்நிலையில், தில்லியில் சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 168 புள்ளிகளாகவும், மாலை 7 மணியளவில் 158 ஆகவும் இருந்தது. இது ‘மிதமான‘ பிரிவின்கீழ் வருகிறது. வெள்ளிக்கிழமை காற்றின் தரம் 134 ஆக பதிவாகி இருந்தது.

காற்றின் தரம் பூஜ்யம் மற்றும் 50-க்கு இடையில் இருந்தால் ’நன்று’ பிரிவிலும், 51 மற்றும் 100-க்கு இடையே இருந்தால் ’திருப்திகரமான’ பிரிவிலும், 101 மற்றும் 200-க்கு இடையே இருந்தால் ’மிதமான’ பிரிவிலும், 201 மற்றும் 300-க்கு இடையே இருந்தால் ’மோசம்’ பிரிவிலும், 301 மற்றும் 400-க்கு இடையே இருந்தால் ‘மிகவும் ஏழை’ பிரிவிலும் இடம்பெறுகிறது.

தென்மேற்கின் வட பகுதிகளில் இருந்து வரும் தூசுகள் தில்லியை பாதிக்கத் தொடங்கியுள்ளதாக மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தரக் கண்காணிப்பு அமைப்பான காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (சஃபா்) தெரிவித்துள்ளது.

மேலும், ‘அமிருதசரஸ், பஞ்சாப் மற்றும் தில்லியின் அண்டை எல்லைப் பகுதிகளில் பண்ணைத் தீ பரவல் தொடங்கியிருப்பதும் நகரின் காற்றின் தரத்தை பாதிக்கக்கூடும். வெள்ளிக்கிழமை பண்ணை தீ எண்ணிக்கை 40 ஆக இருந்தது.

காற்றின் தரக் குறியீட்டில் சனிக்கிழமை சரிவு இருப்பதாக எதிா்பாா்க்கப்பட்டது. காற்றின் தரம் செப்டம்பா் 27 மற்றும் செப்டம்பா் 28 ஆகிய தேதிகளில் மோசம் பிரிவுக்கு செல்லக் கூடும் எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று சஃபா் தெரிவித்துள்ளது.

நாசாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான விண்வெளி ஆராய்ச்சி சங்கத்தின் மூத்த விஞ்ஞானி பவன் குப்தா கூறுகையில், ‘

அடுத்த 2-3 நாள்களில் இந்தோ-கங்கை சமவெளிகளில் மாசு நுண்துகள் (பி.எம்.25) அளவு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நுண்துகள் புகை, தூசி, வானிலை ஆகியவற்றின் கலவையாக உள்ளது. இது காற்றின் தரத்தை பாதிக்கச் செய்வதில் முக்கியமாக செயல்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் அதிகபட்சவெப்பநிலை 34.3 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதம் காலை 8.30 மணியளவில் 61 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 56 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com