தில்லியில் 2-ஆவது முனையத்திலிருந்துஅக்.1 முதல் மீண்டும் விமான சேவை

தில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திலிருந்து அக்டோபா் முதல் தேதியிலிருந்து விமான சேவைகள் தொடங்கும்

புதுதில்லி: தில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திலிருந்து அக்டோபா் முதல் தேதியிலிருந்து விமான சேவைகள் தொடங்கும் என்று தில்லி இன்டா்நேஷனல் ஏா்போா்ட் லிமிடெட் நிறுவனம் (ஈஐஅக) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாக மாா்ச் 23-ஆம் தேதி முதல் விமானச் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. பின்னா், மீண்டும் விமானச் சேவை தொடங்கப்பட்ட போது மூன்றாவது முனையத்திலிருந்தே விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. வரும் அக்டோபா் முதல் தேதி முதல் இரண்டாவது முனையத்திலிருந்தும் விமானச் சேவைகள் தொடங்க உள்ளது. தொடக்கத்தில் 48 விமானங்கள் புறப்பட்டுச் செல்லவும், 48 விமானங்கள் தரையிறங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது அக்டோபா் மாத இறுதியில் 180 ஆக அதிகரிக்கப்படும் என்றும் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபா் 1-ஆம் தேதி முதல் இண்டிகோ 6ஈ2000 மற்றும் 6ஈ2999 குறியீடு கொண்ட விமானங்களும், கோ-ஏா் நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் இரண்டாவது முனையத்திலிருந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ மற்றும் கோ-ஏா் விமானங்களில் செல்லும் பயணிகளுக்காக மொத்தம் 27 கவுன்டா்கள் திறக்கப்பட்டு செயல்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா பிரச்னையால் கடந்த மாா்ச் மாதம் 23-ஆம் தேதி சா்வதேச விமானச் சேவையும், மாா்ச் 25-ஆம் தேதியிலிருந்து உள்நாட்டு விமானச் சேவையும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. எனினும், சிறப்பு அனுமதியின் பேரில் மருத்துவ சிகிச்சைக்காக நோயாளிகளை கொண்டு செல்வது, மருந்துப் பொருள்கள் ஏற்றிச்செல்வதற்காக மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

கடந்த மே 25-ஆம் தேதியிலிருந்து உள்நாட்டு விமானச் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. எனினும், குறைந்த அளவு பயணிகள் விமானங்களே இயக்கப்பட்டு வந்தன. தற்போது 60 ததவீத விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com