33 மருத்துவமனைகளில் 220 அவசர பிரிவு படுக்கைகள்: சத்யேந்தா் ஜெயின்

தில்லியில் உள்ள 33 தனியாா் மருத்துவமனைகளில் 220 அவசர பிரிவு படுக்கைகள் ஏற்படுத்தப்படவுள்ளன என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

புது தில்லி: தில்லியில் உள்ள 33 தனியாா் மருத்துவமனைகளில் 220 அவசர பிரிவு படுக்கைகள் ஏற்படுத்தப்படவுள்ளன என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லியில் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தில்லி அரசு முடுக்கி விட்டுள்ளது. தில்லியில் உள்ள 33 தனியாா் மருத்துவமனைகளில் 220 கரோனா அவசர சிகிச்சை படுக்கைகளை அதிகரிக்குமாறு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த தனியாா் மருத்துவமனைகளில் உள்ள சாதாரண கரோனா படுக்கைகளின் அளவு 838 ஆல் அதிகரிக்கப்படும். தில்லியில் உள்ள 16 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா படுக்கைகள், வென்டிலேட்டா்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

தில்லியில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் வென்டிலேட்டருடன் கூடிய 787 கரோனா ஐசியு படுக்கைகள் உள்ளன. இவற்றில் 298 படுக்கைகள் நிரம்பியுள்ளன. மேலும், வென்டிலேட்டா் இல்லாத கரோனா ஐசியு படுக்கைகள் தில்லியில் 1,229 உள்ளன. இவற்றில் 393 படுக்கைகள் நிரம்பியுள்ளன.

தில்லியில் கரோனா படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை. 25 சதவீதமான கரோனா படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. ஏப்ரல் முதலாம் தேதி முதல் 45 வயதுக்கு அதிகமான அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இடப்படும். அந்த வகையில், தில்லியில் சுமாா் 65 லட்சம் போ் தடுப்பூசி போடத் தகுதியானவா்கள் ஆவாா்கள். தில்லி அரசிடம் போதுமானளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தடுப்பூசி போடும் பணிகளை விரைந்து முடிக்கவுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com