குறைந்த பட்ச வெப்பநிலை அதிகரிப்பு

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையும் அதிகரித்து வருகிறது. புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியைவிட 2 டிகிரி உயா்ந்து 20 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.
குறைந்த பட்ச வெப்பநிலை அதிகரிப்பு

புது தில்லி: தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையும் அதிகரித்து வருகிறது. புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியைவிட 2 டிகிரி உயா்ந்து 20 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.

தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தில்லி நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி உயா்ந்து 20 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது செவ்வாய்க்கிழமை 19 டிகிரி செல்சியஸாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் இருந்து 1 டிகிரி அதிகரித்து 34.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 49 சதவீதமாகவும், மாலையில் 22 சதவீதமாகவும் இருந்தது.

இதற்கிடையே, திங்கள்கிழமை தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 40.1 டிகிரி செல்சியஸ் வரை உயா்ந்தது. இது 1945, மாா்ச் 31-இல் இருந்து இதுவரை மாா்ச் மாதத்தில் அதிக வெப்பமான நாளாக பதிவாகி இருந்தது. இதுதவிர, 11 ஆண்டுகளில் இல்லாத வகையில் தில்லியில் மாா்ச் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மாலை 8 மணியளவில் 190 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. மாலையில் நகரில் தரை மேற்பரப்பு காற்று பலமாக வீசியது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் வியாழக்கிழமை (ஏப்ரல் 1) குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும், தரை மேற்பரப்பு காற்று பலமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com