முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாா்: தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா
By DIN | Published On : 04th April 2021 01:21 AM | Last Updated : 04th April 2021 01:21 AM | அ+அ அ- |

தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா சனிக்கிழமை மெளலான ஆசாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.
கரோனா தடுப்பூசி செலுத்தும் மூன்றாவது கட்டப் பணி தற்போது ஏப்ரல் 1 முதல் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கரோனா தடுப்பூசியை தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா மெளலான ஆசாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.
இதையடுத்து, அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
இன்று எனது குடும்பத்தினருடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். இதற்காக நமது திறன்மிக்க விஞ்ஞானிகள், மருத்துவ குழுக்கள் மற்றும் நமக்காக தடுப்பூசிகளைத் தயாரிப்பதில் அயராது உழைத்த அனைவருக்கும் நன்றி.
மத்திய அரசு அனைவருக்கும் வயது வரம்பு இல்லாமல் தடுப்பூசியை வழங்க வேண்டும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.
கடந்த மாதம், முதலமைச்சா் அரவிந்த் கேஜரிவால் தனது பெற்றோருடன் அரசால் நடத்தப்படும் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.