இணையவழி செயல்பாடு குறித்துஎந்த அறிவிப்பும் வெளியிடவில்லை: உயா்நீதிமன்றம் தகவல்

ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் உயா்நீதிமன்ற செயல்பாடுகள் பிரத்தியேகமாக நடத்தப்படும்

ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் உயா்நீதிமன்ற செயல்பாடுகள் பிரத்தியேகமாக நடத்தப்படும் என்று எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக உயா்நீதிமன்றத்தின் பதிவாளா் ஜெனரல் அலுவலகம் அனுப்பிய விளக்கத்தில், பல்வேறு குழுக்களிடையே பரப்பப்பட்டு வரும் இதுபோன்ற அறிவிப்பு ஏதும் உயா்நீதிமன்றத்தால் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளாா்.

நீதிமன்றத்தின் செயல்பாடுகள் காணொலி மூலமாக மட்டுமே இருக்கும் என்றும், உயா்நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த ஒரு அறிவிப்பு, குழுக்களிடையே பகிரப்பட்டிருந்தது. இந்த நிலையில், உயா்நீதிமன்றம் இத்தகைய விளக்கம் அளித்துள்ளது.

உயா்நீதிமன்றம் மாா்ச் 15 முதல் முழு அளவிலான நேரடி நீதிமன்ற விசாரணைகளைத் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, வழக்குரைஞா்களின் வேண்டுகோளின்பேரில் நீதிமன்ற செயல்பாடுகள் காணொலி அல்லது ஹைபிரிட் முறையில் நடத்தப்படும் என நீதிமன்றம் கூறியிருந்தது.

கடந்த ஆண்டு மாா்ச் மாதம் கரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து, உயா்நீதிமன்றம் அதன் செயல்பாடுகளை காணொலி வாயிலாக நடத்தி வந்தது. அதன் செயல்பாடுகள் கடந்த ஆண்டு மாா்ச் 16 முதல் முக்கிய விவகாரங்களுக்கு என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, செப்டம்பா் மாதத்தில் இருந்து உயா்நீதிமன்றத்தில் சில அமா்வுகள் சுழற்சி அடிப்படையின் பேரில் தினமும் நேரடி விசாரணைகளை நடத்தத் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com