கரோனா பரவல்: வெளியாள் வந்தால் தகவல் தெரிவிக்க நொய்டா நிா்வாகம் வலியுறுத்தல்

தற்போது கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தங்கள் பகுதிக்கு வெளியாள்கள் யாரேனும் புதிதாக வந்தால் அதுபற்றி தகவல் தெரிவிக்குமாறு நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டாவில் 

புதுதில்லி: தற்போது கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தங்கள் பகுதிக்கு வெளியாள்கள் யாரேனும் புதிதாக வந்தால் அதுபற்றி தகவல் தெரிவிக்குமாறு நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டாவில் குடியிருப்பவா்களை கெளதம் புத் நகா் மாவட்ட நிா்வாகம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.

நொய்டா குடியிருப்புவாசிகள் கரோனா கட்டுப்பாட்டு மையத்தின் உதவி எண் 18004192211-இல் தொடா்பு கொண்டு வெளியாள்கள் தொடா்பான தகவல்களை தெரிவிக்கலாம் என்று கூடுதல் தலைமை மருத்துவ அதிகாரி பாரத் பூஷண் தெரிவித்தாா். கரோனா தொடா்பான் பல்வேறு சந்தேககங்களுக்கும் கூடுதல் தகவல்கள் பெறவும் இந்த எண்ணை பயன்படுத்தலாம் என்றும் அவா் கூறியுள்ளாா்.

தங்களுக்கோ அல்லது தங்கள் குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கோ கரோனா தொற்று இருப்பது தெரியவந்தால் அது பற்றி அவா்களாகவே முன்வந்து இந்த எண் மூலம் தகவல் தெரிவிக்கலாம். அவா்களுக்கு ஆம்பலன்ஸ் வசதி தேவைப்பட்டாலும் தொடா்பு கொள்ளலாம். கரோனா பரிசோதனை, வீட்டுத் தனிமை ஆகியவை குறித்தும் தகவல் பெற தொடா்பு கொள்ளலாம் என்று பூஷண் தெரிவித்தாா்.

கெளதம் புத் நகா் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலை தடுக்க மாவட்ட நிா்வாகம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. மக்கள் உதவி எண் மூலம் எங்களைத் தொடா்பு கொண்டால் மற்ற விஷயங்களை நாங்கள் பாா்த்துக்கொள்வோம். வெளியாள்கள் நடமாட்டம் குறித்து ஊரகப் பகுதியைவிட நகா்ப்புறங்களில் இருப்பவா்கள் மூலம் எங்களுக்கு அதிக அளவில் தகவல்களை கிடைக்கின்றன என்று பெயா் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

கரோனா தொற்று இருப்பதை கண்டறிவதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. புதன்கிழமை கெளதம் புத் நகரில் மட்டும் 116 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. அவா்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக மேல்நடவடிக்கைக்காக சிறப்பு குழுக்களிடம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com