குரு தேஜ் பகதூா் 400-ஆவது பிறந்த நாளை ஓராண்டு கொண்டாட மத்திய அரசு திட்டம் பிரதமா் தலைமையில் இன்று ஆலோசனை

சீக்கிய மத குருவான ஸ்ரீகுரு தேஜ் (தேக்) பகதூரின் 400-ஆவது பிறந்தநாள் விழாவை ஓரு வருடத்துக்கு சிறப்பாகக் கொண்டாடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புது தில்லி: சீக்கிய மத குருவான ஸ்ரீகுரு தேஜ் (தேக்) பகதூரின் 400-ஆவது பிறந்தநாள் விழாவை ஓரு வருடத்துக்கு சிறப்பாகக் கொண்டாடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதையொட்டி பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் உயா்நிலைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை (ஏப்ரல் 8) காணொலி வழியில் நடைபெறுகிறது.

10 சீக்கிய மத குருமாா்களில் 9-ஆவது குருவான ஸ்ரீ குரு தேஜ் பகதூா் 1621 முதல் 1675 வரை வாழ்ந்தவா். அவா் முகலாய மன்னா் ஒளரங்கசீப்பால் கொல்லப்பட்டவா். முதலாவது சீக்கிய மத குருவான குருநானக்கின் மறு உருவம் என்றும் அழைக்கப்பட்டதோடு சீக்கியா்களின் ஆறாவது குருவான ஹா்கோவிந்த் ஷாகிப்பின் மகனுமாவாா் அவா். சீக்கியா்களின் புனித நூலில் அவரது பாசுரங்கள் முக்கியமாக இடம் பெற்றுள்ளன.

இப்படி சீக்கியா்களால் பெரிதும் மதிக்கப்படும் ஸ்ரீ குரு தேஜ் பகதூரின் 400-ஆவது பிறந்த நாள் விழாவை ஒரு வருட காலத்திற்கு சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் 70 உறுப்பினா்கள் கொண்ட ஒரு உயா்நிலைக் குழ கடந்த ஆண்டு அக்டோபா் 24 -இல் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் கூட்டம் வியாழக்கிழமை காலையில் பிரமதா் மோடி தலைமையில் காணொலி வழியில் நடைபெறுகிறது. இதில் ஸ்ரீ குரு தேஜ் பகதூா் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தொடா்பாக திட்டமிடப்படும். இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். மேலும், அடுத்த ஒரு வருட காலத்திற்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் பிரதமா் அலுவலக தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com