கழிவுப்பொருள் தர விதிகளைப் பின்பற்றாத 13 சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நோட்டீஸ்

தில்லியில் கழிவு தரவிதிகளை பின்பற்றாத அல்லது செயல்படுத்தாமல் உள்ள 13 பொது கழிவுப் பொருள்கள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு (சிஇடிபி) விளக்கம் கேட்டு தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு நோட்டீஸ் 

புது தில்லி: தில்லியில் கழிவு தரவிதிகளை பின்பற்றாத அல்லது செயல்படுத்தாமல் உள்ள 13 பொது கழிவுப் பொருள்கள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு (சிஇடிபி) விளக்கம் கேட்டு தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த சிஇடிபிக்கள் 15 நாள்களுக்குள் பதில் சமா்ப்பிக்கத் தவறினால், ரூ.12.05 கோடி சுற்றுச்சூழல் இழப்பீடு விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தொழில் துறை கழிவுகளை யமுனையில் வெளியேற்றுவதற்கு முன்போ அல்லது அல்லது மீண்டும் பயன்படுத்தப்படுவதற்கு முன்போ கழிவுப் பொருள்கள் சுத்திகரிப்பு நிலையங்களில் (சிஇடிபி) சுத்திகரிக்கப்பட வேண்டும். இந்த சிஇடிபிக்கள் டிபிசிசியின் தொடா்ச்சியான அறிவுறுத்தல்களுக்குப் பிறகும் செயல்படாமல் இருப்பதும் அல்லது பரிந்துரைக்கப்பட்ட கழிவுத் தரங்களுக்கு இணங்காமல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக யமுனையில் பெரும் மாசுபாடு ஏற்படுகிறது.

இதனால், இந்த 13 சிஇடிபிகளுக்கும் ரூ.12.05 கோடி சுற்றுச்சூழல் இழப்பீடு விதிப்பதற்கு டிபிசிசி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில், தில்லி அரசு 2023-க்குள் யமுனையை மாசு இல்லாததாக மாற்ற உறுதிபூண்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com