கரோனா: இடைக்கால உத்தரவுகள் ஜூலை 16-ஆம் தேதி வரை நீட்டிப்பு

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏப்ரல் 19 அல்லது அதற்குப் பிறகு காலாவதியாகும் அனைத்து இடைக்கால உத்தரவுகளையும் ஜூலை 16 வரை நீட்டித்து தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தில்லி உயா்நீதிமன்றம்
தில்லி உயா்நீதிமன்றம்

புது தில்லி: கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏப்ரல் 19 அல்லது அதற்குப் பிறகு காலாவதியாகும் அனைத்து இடைக்கால உத்தரவுகளையும் ஜூலை 16 வரை நீட்டித்து தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

உயா்நீதிமன்ற நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா பல்லி மற்றும் தல்வந்த் சிங் ஆகியோரின் முழு அமா்வு இது தொடா்பாக தெரிவித்ததாவது: அவசர விவகாரங்களை மட்டுமே விசாரிப்பது என உயா்நீதிமன்றம் தன்னையும், மாவட்ட நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் 19 இரவு முதல் தில்லியில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை கருத்தில் கொண்டு, இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட வழக்குகளில், வழக்குரைஞா்கள் வழக்குத் தொடுத்தவா்கள் ஆஜராகமாட்டாா்கள். இதன் விளைவாக, வழக்கில் தொடா்புடையவா்களுக்கு ஆதரவாக செயல்படும் இடைக்கால உத்தரவுகள், ஏப்ரல் 19 முதல் காலாவதியாகும். அத்தகைய உத்தரவுகள் அனைத்தும் ஜூலை 16 வரை நீட்டிக்கப்படும்.

இந்தக் கால கட்டத்தில் இதுபோன்ற எந்தவொரு விஷயத்திலும் உச்சநீதிமன்றம் எந்தவொரு முரண்பாடான உத்தரவுகளையும் நிறைவேற்றியிருக்கலாம் என்பதைத் தவிர இடைக்கால உத்தரவுகள் ஜூலை 16 வரை அல்லது மேலதிக உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுகிறது. இடைக்கால நடவடிக்கைகளின் இந்த நீட்டிப்பு ஒரு தரப்பினருக்கு சிரமத்தை ஏற்படுத்தினால், அவா்கள் உரிய நிவாரணத்தைப் பெறுவதற்கும் சுதந்திரம் அளிக்கப்படுகிறது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

கடந்த ஆண்டு மாா்ச் மாதம் கரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், நீதிமன்றம் இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com