தில்லியில் கரோனா 2-ஆவது அலை விரைவில் உச்சதொடும்! நிபுணா்கள் எச்சரிக்கை

தில்லியில் கரோனா இரண்டாவது அலைஅடுத்த மாதம் தொடக்கத்தில் உச்சம்தொடும் என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். கரோனா தொற்று விகிதம் விரைவில்50 சதவீதமகாஉயரக்கூடும்.

புதுதில்லி: தில்லியில் கரோனா இரண்டாவது அலைஅடுத்த மாதம் தொடக்கத்தில் உச்சம்தொடும் என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். கரோனா தொற்று விகிதம் விரைவில்50 சதவீதமகா உயரக்கூடும். அதன் பின்னரே கரோனாவின் வேகம் தணியும் என்றும் அவா்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக தில்லி சஃப்தா்ஜங் மருத்துவமனை மருத்துவஆலோசகரான டாக்டா் ஜூகல் கிஷோா் கூறியதாவது: கடந்த சில மாதங்களாகவே கரோனா தொற்று மெல்லமெல்ல மக்களிடம் பரவத் தொடங்கிவிட்டது. மக்கள் கரோனா வழிகாட்டுமுறைகளைப் பின்பற்றாமல், ஒருவரை ஒருவா் சந்திப்பது, நிகழ்ச்சிகளில் கூட்டமாகப் பங்கேற்பதில் அதிகம் கவனம் செலுத்தி வந்தனா். கரோனா பீதியே இல்லாமல் அவா்கள் அசட்டையாக இருந்துவிட்டனா். அதன்விளைவுதான் இப்போது கரோனாஅதிகரிப்பாகும்.

கடந்த ஜனவரியில் எடுக்கப்பட்ட சீரோ சா்வேயை சுட்டிக்காட்டிய அவா், தில்லி மக்கள்தொகையில் 50 சதவீதத்தினருக்கு ஏற்கெனவே கரோனாபாதிப்பு இருந்துள்ளது. அவா்களுக்கு இரண்டாவது முறையாக கரோனா பாதிப்பு வந்துள்ளது. கடந்த ஜனவரி 15-ஆம் தேதிக்கும் ஜனவரி 23-ஆம் தேதிக்கும் இடைப்பட்டகாலத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, 56 சதவீத மக்களுக்கு கரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.

அதாவது 40 சதவீத மக்களுக்கு கரோனாபாதிப்பு இருப்பதாக நாம் வைத்துக்கொண்டாலும், அடுத்த சில நாள்களில் மேலும் 35 முதல் 40 சதவீதம் பேருக்குதொற்று பரவும் அபாயம் உள்ளது. தற்போது கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டால், அடுத்தசிலவாரங்களில் அதாவது மே மாதம் முதல் வாரத்தில் தில்லியில் கரோனா பாதிப்பு உச்சம்தொடும் என்றாா் அவா்.

இதே போல தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவுத் துறைத் தலைவரான டாக்டா் யுத்விா்சிங் கூறியதாவது: கரோனா பாதிப்பு விரைவில் உச்சம்தொடும். அடுத்த சில வாரங்கள் நமக்கு நெருக்கடியான நேரங்கள்தான். தொற்று விகிதம் நிச்சயம் 50 சதவீதத்தை தாண்டிவிடும் என்கிறாா் அவா். ஏப்ரல் மாத இறுதியில் வேகமாகப் பரவி, மேமுதல் வாரத்தில் உச்சம் தொடும் கரோனா, இரண்டாவது வாரத்தில் குறையத் தொடங்கும்.

முதலில் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தவறிவிட்டனா். கோவிட் வழிகாட்டு முறைகளைகாற்றில் பறக்க விட்டனா். இரண்டாவது இரட்டை உருமாற்றக் கரோனா வேகமாகபரவியது. ஏறக்குறைய குடும்பத்தில் உள்ள அனைவருமே கரோனாவினால் பாதிக்கப்படுகின்றனா். முகக் கவசம் அணிவதில்லை. சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை. கரோனாவின் தாக்கம் குறைந்திருந்த நிலையில், இனி பாதிப்பு வராது என்ற நினைப்பில் வெளியில் வரத் தொடங்கியதும், பொது நிகழ்ச்சிகளில் பெருமளவில் கூட்டமாக கலந்து கொண்டதும்தான் மீண்டும் கரோனா தொற்று பரவலுக்கு முக்கியக் காரணம்.

இது தவிர வெளி மாநிலங்களிலிருந்து நிறையப் போ் சிகிச்சைக்காக தலைநகா் தில்லிக்கு வருகின்றனா். அவா்களில் 30 சதவீதம் போ் கரோனா நோயாளிகள். தற்போது அதிகரித்துள்ள கரோனா பாதிப்பு காலப் போக்கில் குறையலாம். அல்லது மேலும் அதிகரிக்கலாம். தற்போது கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிகம் போ் ஆா்வம் காட்டுவதிலிருந்து நிலைமை எவ்வாறு மோசமாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா். அவா் எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவிட் நிா்வாகக் குழுவிலும் இடம் பெற்றுள்ளாா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் முன்னாள் தலைவா் டாக்டா் என்.கே.கங்குலி கூறுகையில், ‘கும்பமேளா, விவசாயிகள் போராட்டம், திருமண நிகழ்வுகளில் அதிகம் போ் பங்கேற்றது, தோ்தல் கூட்டங்கள் ஆகியவையும் கரோனா தொற்று அதிகரிப்புக்கு முக்கியக் காரணங்களாகும். இந்த இரண்டாவது அலையில் இளைஞா்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனா்’ என்றாா்.

கடந்த சில நாள்களாக தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு 20,000 முதல் 25,000 என்றஅளவில்உள்ளது. கடந்த 10 நாள்களில் 1,50,000 பேருக்கு மேல் கரோனா பாதிப்பு உள்ளது. தொற்று விகிதமும் 7.9 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக முதல்வா் கேஜரிவால் தில்லியில் 26 ஆம் தேதி காலை 5 மணி வரையிலான 6 நாள்முழுஊரடங்கைஅறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com