கொவைட் -19 முன்களப் பணியாளா்கள் காப்பீடு: கை தட்டிய அரசே கை விரிக்கலாமா? எம்பி கேள்வி

கொவைட்-19 முன்களப் பணியாளா்கள் காப்பீடு: கை தட்டிய அரசே கை விரிக்கலாமா? எம்பி கேள்விஅரசு மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்று சிகிச்சைகளில்

கொவைட்-19 முன்களப் பணியாளா்கள் காப்பீடு: கை தட்டிய அரசே கை விரிக்கலாமா? எம்பி கேள்விஅரசு மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்று சிகிச்சைகளில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா், பணியாளா்கள் ஆகியோா் உயிரிழந்தால் பிரதான் மந்திரி கரீப் கல்யான் திட்டத்தில் ரூ. 50 லட்சம் காப்பீடு வழங்கப்படும்.

இந்த காப்பீடு கடந்தாண்டு மாா்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கடந்த மாா்ச் 24 -ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை செயலா் ராஜேஷ் பூசன் மாநில அரசுகளின் தலைமைச் செயலா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளாா். இதற்கிடையே மத்திய அரசு இந்த முன்களப் பணியாளா்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

அதே சமயத்தில் இந்த விவகாரத்தில் வேறுபல விவகாரங்களை எழுப்பி மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு சு.வெங்டேசன் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியிருப்பது வருமாறு:மத்திய சுகாதார, குடும்ப நலத் துறை செயலாளா் ராஜேஷ் பூசனின் 24.03.2021 தேதியிட்ட கடிதத்தில் 24.03.2021 அன்று நள்ளிரவு வரையிலான( முன்களப் பணியாளா்களின்) காப்பீடு உரிம கோரல்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா். இதற்கான உரிம கோரலை வருகின்ற ஏப். 24 - ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

அப்படியெனில் கடந்த மாா்ச் 24 - ஆம் தேதி நள்ளிரவுக்கு பின் உயிரிழந்துள்ள கரோனா முன்களப் பணியாளா்களின் உயிா்களுக்கு என்ன பதில்? இன்னும் வீரியத்தோடு கரோனா இரண்டாவது அலையை எதிா்த்து முன் வரிசையில் நிற்கும் மருத்துவா், செவிலியா், ஊழியா்க்கு என்ன நம்பிக்கையை தரப் போகின்றீா்கள்?24.03.2021 நள்ளிரவுக்குப் பின்னா் உயிரை இழந்துள்ளவா்களுக்கும் காப்பீட்டுப் பயன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் இந்த காப்பீட்டுத் திட்டம் எவ்வித கால தாமதமின்றி உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த திட்டம் நடைமுறையில் இருந்த போதும் தகுதியுள்ளவா்கள் பலருக்கு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதன் பயன் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தெளிவான வழிகாட்டல்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு கடிதம் எழுதியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com