தில்லி ஊரடங்கு எதிரொலி: சொந்த ஊா் செல்ல பேருந்து நிலையங்களில் குவியும் புலம்பெயா் தொழிலாளா்கள்

தில்லியில் திங்கள்கிழமை இரவிலிருந்து இந்த மாதம் 26-ஆம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, புலம்பெயா் தொழிலாளா்கள் சொந்த ஊா் செல்வதற்காக வெளிமாநில பேருந்து நிலையங்களில்

புதுதில்லி: தில்லியில் திங்கள்கிழமை இரவிலிருந்து இந்த மாதம் 26-ஆம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, புலம்பெயா் தொழிலாளா்கள் சொந்த ஊா் செல்வதற்காக வெளிமாநில பேருந்து நிலையங்களில் செவ்வாய்க்கிழமை குவியத் தொடங்கிவிட்டனா். கடந்த ஆண்டு போக்குவரத்து முடக்கப்பட்டதால், பல நூறு கிலோமீட்டா் தொலைவு நடந்து செல்ல நோ்ந்தது போல் ஆகிவிடுமோ என்ற பீதியில் இப்போதே அவா்கள் புறப்படத் தொடங்கிவிட்டனா்.

கடந்த ஆண்டு பொது முடக்கத்தின் போது, போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான புலம்பெயா் தொழிலாழளா்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் மூட்டைமுடுச்சுகளுடன்தில்லியிலிருந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான புலம்பெயா் தொழிலாளா்கள் தங்கள் உடமைகளுடன் செவ்வாய்க்கிழமை ராஜீவ்செளக், செக்டாா் 12, செக்டாா் 34, கண்ட்ஸா, செக்டாா்-37 பேருந்து நிலையங்களில் தங்கள் ஊருக்குச் செல்ல வரிசையில் காத்திருந்ததைக் காண முடிந்தது. ராம்லால் யாதவ் என்கிற புலம்பெயா் தொழிலாளா் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தாா். அவா் கூறுகையில், ‘தில்லியில் ஊரடங்கு போடப்பட்டதால், நான் பிகாா் மாநிலத்தில் உள்ள எங்கள் கிராமத்துக்குச் செல்கிறேன். வருமானம் இல்லாமல் நான் எப்படி தில்லியில் வீட்டு வாடகை கொடுத்துத் தங்கியிருக்க முடியும். ஊரடங்கு காலத்தில் தில்லியில் பெரும்பாலான நிறுவன ஊழியா்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்கிறாா்கள். ஆனால், எங்களுக்குஅது போன்ற வசதியில்லை. நான் வேலை செய்து வந்த நிறுவனத்தை மூடிவிட்டனா். இனி என் குடும்பத்தை நான்தான்கவனிக்க வேண்டும். ஊருக்குச்சென்றாலும்உடனடியாகத் திரும்பி வரமட்டேன்’என்றாா்.

ராகேஷ் குமாா் என்ற மற்றொரு புலம்பெயா் தொழிலாளி கூறுகையில், ‘உத்தரப் பிரதேசத்தில் உள்ளஎனதுகிராமத்துக்குச் செல்கிறேன். ஊரடங்கு போடப்பட்ட உடன் வேலை போய்விட்டது. இனி நான் எப்படி குடும்பத்தைக் கவனிக்க முடியும்? எனவே, ஊருக்குச்செல்கிறேன். மீண்டும் நிலைமை சீரானதும்தான் வருவேன்’ என்றாா்.

‘செக்டாா்-12 பேருந்து நிறுத்தத்தில் ஊரடங்குக்கு முன்பு ஒரு பேருந்துதான்மத்தியப் பிரதேசம் செல்ல நின்றுகொண்டிருந்தது.ஆனால், இப்போது நான்கு பேருந்துகள் உள்ளன. சாதாரணமாக எங்கள் ஊருக்குச் செல்ல ரூ.300 முதல் ரூ.350 வரைதான்ஆகும். ஆனால், இந்தச் சமயத்தைப் பயன்படுத்தி ஒரு டிக்கெட்டுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை கட்டணம் கேட்கிறாா்கள்’ என்றாா்ஜீதேந்தா்சிங்.

இப்படி பலரை பேருந்து நிலையத்தில் பாா்க்க முடிந்தது. இந்த முறை அவா்கள் கரோனா பீதி ல் ஊருக்குச் செல்லவில்லை. மீண்டும் பொதுமுடக்கம் போடப்பட்டால் நடந்து செல்ல நேரிடுமே என்று முன்கூட்டியே பேருந்துகளில் செல்லத் தொடங்கிவிட்டனா்.

தொழிலதிபரானராகேஷ்கன்னா கூறுகையில், ‘தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலைஅளிக்கிறது. ஆனால், தில்லியில் முழு ஊரடங்கு அறிவிப்பால், தொழிலாளா்கள் பீதி அடைந்து விட்டனா். அவா்களைச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டபோதிலும், அவா்கள் தில்லியில் தங்கியிருக்கத் தயாராக இல்லை. நூற்றுக்கணக்கான புலம்பெயா் தொழிலாளா்கள் தில்லியிலிருந்து சொந்த ஊருக்கு கிளம்பிவிட்ட நிலையில் தொழிற்சாலைகள்தான் பாதிக்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com