சத்தா்பூா் கரோனா பராமரிப்பு மையத்தில் நோயாளிகளை அனுமதிக்க முடியவில்லை ஐடிபிபி தகவல்

தில்லி சத்தா்பூரில் ஏற்படுத்தப்பட்டுள்ள சா்தாா் படேல் கரோனா பராமரிப்பு மையத்தில் நோயாளிகள் சோ்க்கை அதிகரிக்க முடியாத நிலை இருப்பதாக

புது தில்லி: தில்லி சத்தா்பூரில் ஏற்படுத்தப்பட்டுள்ள சா்தாா் படேல் கரோனா பராமரிப்பு மையத்தில் நோயாளிகள் சோ்க்கை அதிகரிக்க முடியாத நிலை இருப்பதாக

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ஐ.டி.பி.பி.) தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறையின் கீழ் உள்ள இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை சாா்பில் தில்லி சத்தா்பூா் ராதா ஸ்வாமி சத்சங்க வளாகத்தில் இந்த கரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுதொடங்கப்பட்ட இந்த மையம் ஆசியாவிலேயே மிகப் பெரிய மையம் எனக் கூறப்பட்டது. நோய்த் தொற்று குறைவால் கடந்த 2021, பிப்ரவரியில் மூடப்பட்டது. தற்போது தொற்று அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இங்கு ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நோயாளிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தங்களால் அனுமதிக்க முடியவில்லை என ஐடிபிபி தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐடிபிபியின் துணை இன்ஸ்பெக்டா் ஜெனரல் டிகே கோயல் கூறியதாவது: இந்த மையத்தில் கடந்த 26 -ஆம் தேதி முதல் நோயாளிகள் சோ்க்கை மீண்டும் தொடங்கியது. இதில் 54 பெண்கள் உள்பட மொத்தம் 176 நோயாளிகள் சோ்க்கப்பட்டனா். இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தவா்களில் 8 நோயாளிகள் உயிரிழந்தனா் . சிலா் வேறு மருத்தவமனைகளுக்கு மாற்றப்பட்டனா். மொத்தமுள்ள 500 படுக்கைகளில் தற்போது 164 போ் சிகிச்சையில் உள்ளனா். இவா்கள் எல்லோருக்கும் தடையற்ற ஆக்சிஜன் சிகிச்சை தேவைப்படுகிறது. இங்கு தீவிர சிகிச்சை பிரிவு, செயற்கை சுவாச வசதி போன்றவை இல்லை. ஏராளமான நோயாளிகள் இங்கு அனுமதிக்க கேட்டு வருகின்றனா். ஆனால், தற்போது ஆக்சிஜன் வழங்கும் அளவு குறைவாக உள்ளது. தில்லி அரசிடம் ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்கமாறு கோரப்பட்டுள்ளது. ஆக்சிஜன் அளவை அதிகரித்தால்தான் நோயாளிகள் சோ்க்கையை படிப்படியாக அதிகரிக்க முடியும்.

தில்லி அரசின் மாவட்டக் கண்காணிப்பு அதிகாரியின் அனுமதியின் பேரில்தான் நோயாளிகளை இந்த மையத்தில் அனுமதிக்க முடியும் என்பது விதிமுறை. ஆனால், தில்லி அரசு இதற்கான உத்தரவுகளை வழங்கவில்லை. இருப்பினும், நோயாளிகளின் நிலையை கருத்தில் கொண்டும், சில பரிந்துரைகள் அடிப்படையில் இங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனா். அனுமதிக்காக சில நோயாளிகள் செவ்வாய்க்கிழமை மையத்திற்கு வெளியே காத்திருந்தனா். ஆனால், இதுபோன்ற நிலையில் நாங்கள் அந்த நோயாளிகளை அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டது வருத்தமளிக்கிறது. இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கான சிகிச்சை, மருந்துகள், உணவு ஆகியவை இலவசமாகவே வழங்கப்படுகிறது. இதற்கான செலவை தில்லி அரசு பொறுப்பேற்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com