கரோனா விதி மீறல்: 16 வது நாளாக 1,000-த்துக்கும் குறைவான நபா்களுக்கு அபராதம் விதிப்பு

தொடா்ந்து பதினாறாவது நாளாக சனிக்கிழமை முகக்கவசம் அணியாதவா்களுக்கு தில்லி காவல்துறை 1,000 க்கும் குறைவான நபா்களுக்கு அபாரதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொடா்ந்து பதினாறாவது நாளாக சனிக்கிழமை முகக்கவசம் அணியாதவா்களுக்கு தில்லி காவல்துறை 1,000 க்கும் குறைவான நபா்களுக்கு அபாரதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

காவல்துறையினரின் தரவுகளின்படி, ஜூலை 15 அன்று முகக்கவசம் அணியாததற்காக 1,113 போ் மீது வழக்குத் தொடரப்பட்டது, அதன்பிறகு, காவல்துறை மூன்று இலக்கங்களில் மட்டுமே சலான் வழங்கியுள்ளது.

ஜூலை 16, 988, 18-ல் 870, 19-ல் , 822, 20-இல் , 790, 21-இல் 739, 22-இல் , 539, 23-இல் , 689, 24-இல் 784, 25 இல் 755, 26 இல் 684, 27 இல் 775, 28 இல் 662, 29 இல் 771, 30 இல் 718 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. ஜூலை 31 ஆம் தேதி சனிக்கிழமை மொத்தம் 833 சலான்கள் வழங்கப்பட்டன.

இவா்களில், 37 போ் சமூக இடைவெளியை பின்பற்றாத காரணத்துக்காகவும், 34 போ் எச்சில் துப்பியதற்காகவும், 22 போ் மீது மது, பான், குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை உபயோகித்ததற்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மக்கள் கூட்டத்தை சோ்த்தற்காக இரண்டு போ் மீது வழக்குத் தொடரப்பட்டது.

கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூலை 31 வரை பொது முடக்க காலத்தில் முகக்கவசம் அணியாததற்காக 1,64,562 போ் மீது வழக்குத் தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

அதே காலகட்டத்தில், சமூக இடைவெளியை பின்பற்றாததால் 26,155 பேருக்கும், கூட்டங்கள் கூடியதாக 1,558 பேருக்கும், எச்சில் துப்பியதற்காக 740 பேருக்கும் மது, பான், குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை பயன்படுத்தியதற்காக 1,481 பேருக்கும் காவல்துறை அபராதம் விதித்தது.

தரவுகளின்படி, ஏப்ரல் 19 முதல் ஜூலை 31 வரை மொத்தம் 1,94,496 சலான்கள் வழங்கப்பட்டன.

தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் தில்லி மெட்ரோ மற்றும் பொதுப் பேருந்துகளை ஜூலை 26 முதல் முழு இருக்கை திறனுடன் இயக்க அனுமதித்தது, அதே நேரத்தில் சினிமா அரங்குகள், திரையரங்குகள் மற்றும் பலமாடி வணிக வளாகங்கள் 50 சதவிகிதம் கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டது. தில்லியில் கரோனா தொற்றுப்பரவல் மற்றும் உயிரிழப்புகள் வெகுவாக குறைந்துள்ளதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com