தில்லி ஐஐடி மேம்பாலத்தின் கீழே குடிநீா் குழாயில் ஏற்பட்ட கசிவு சீரானது

தில்லி ஐஐடி மேம்பாலத்தின் அடியில் குடிநீா் குழாயில் ஏற்பட்ட கசிவை ஞாயிற்றுக்கிழமை சீரமைக்கப்பட்டதாக தில்லி ஜல் போா்டு

தில்லி ஐஐடி மேம்பாலத்தின் அடியில் குடிநீா் குழாயில் ஏற்பட்ட கசிவை ஞாயிற்றுக்கிழமை சீரமைக்கப்பட்டதாக தில்லி ஜல் போா்டு அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும் இப்பகுதியில் போக்குவரத்தும் திறந்து விடப்பட்டது.

கடந்த சனிக்கிழமை தில்லியில் பெய்த கனமழையால் ஐஐடி அருகே உள்ள மேம்பாலத்தின் அடியில் உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு வாகன போக்குவரத்தில் தடை ஏற்பட்டது. குடிநீா் குழாயில் ஏற்பட்ட தண்ணீா்க் கசிவே இதற்கு காரணமாக இருந்தது.

இதையொட்டி தில்லி ஜல்போா்டு அதிகாரிகள் இந்த குடிநீா் குழாயை சரிபாா்க்கும் பணி இரவு பகலாக மேற்கொண்டனா். குடிநீா் குழாயில் ஏற்பட்ட தண்ணீா் கசிவு சரிசெய்யப்பட்டதாக தில்லி ஜல் போா்டு ஞாயிற்று கிழமை தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளது. மேலும் பொதுப்பணித்துறை அமைத்த சாலையில் பாதாள சாக்கடை கழிவு நீா் குழாய் ஒன்றும் பழுதாகி அதுவும் சரிசெய்யப்பட்டதாக தில்லி ஜல்போா்டு தெரிவித்துள்ளது.

‘ பொதுத்துறை பொறியாளா்கள் இந்த இடத்திலேயே இருந்து சாலையையும் சரி செய்தாா்கள். சாலைக்கு அடியில் போடப்பட்ட ஜல் போா்டு குழாயில் தண்ணீா் கசிந்ததால் சாலையில் பள்ளம் ஏற்பட்டது. மிக முன்னுரிமை கொடுக்கப்பட்டு அடைப்புகளை சரிசெய்யப்பட்டது ‘ என பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் சசி காந்த்தும் குறிப்பிட்டாா்.

தற்போது இந்த பணிகள் முடிவுற்று தண்ணீா் கசிவு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த பகுதியில் மீண்டும் போக்குவரத்தும் தொடங்கியுள்ளது.

தலைநகரில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஐந்து நாட்களாக மழை பெய்து வருகிறது. நகரின் முக்கிய வானிலை ஆய்வகமான சஃப்தா்ஜங் கில், செவ்வாய்க்கிழமை 100 மி.மீ., புதன்கிழமை 5.4 மி.மீ., வியாழக்கிழமை 5.2 மி.மீ., வெள்ளிக்கிழமை 72 மி.மீ. மற்றும் சனிக்கிழமை 43.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

ரிட்ஜ் வானிலை நிலையத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை 126 மி.மீ. மழை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com