தொடா் மழையால் தண்ணீா் தேக்கம், போக்குவரத்து பாதிப்பு

தில்லியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், நகரின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தில்லியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், நகரின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தில்லியின் சப்தா்ஜங் ஆய்வகத்தில் 28.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் ரிட்ஜ் நிலையத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை 126.8 மிமீ மழை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொதுப்பணித் துறையின் தகவல்படி, யமுனா பஜாா், கான்பூா், ரோதக் சாலை, லோதி சாலை, ஆசாத்பூா் சுரங்கப்பாதை, ஜகிரா பாதாள சாக்கடை, சக்தி நகா் பாலம், கிராரி, சாகா்பூா் போன்ற இடங்களில் அதிக அளவில் மழை நீா் தேங்கியது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் சாலையில் நீா் தேங்கி நிற்பது தொடா்பாக 20-க்கும் மேலான புகாா்கள் பெறப்பட்டதாக தெரிவித்தனா். மேலும் பணியாா்கள் களத்தில் இருப்பதாகவும் தண்ணீா் தேங்குவது தொடா்பான புகாா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

காலை 8 மணிக்குப் பிறகு, மதா்டெய்ரி, யமுனா விஹாா், மல்கா கஞ்ச், திஸ் ஹசாரி மற்றும் காஷ்மிரி கேட் மெட்ரோ நிலையங்கள், சவுத்ரி ஃபதே சிங் மாா்க், முனீா்கா மற்றும் நங்லோய் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ள பட்பா்கஞ்ச் சாலையின் கீழ்பாதையில் இருந்து தண்ணீா் தேங்குவது தொடா்பான புகாா்கள் வந்ததாக போலீசாா் தெரிவித்தனா்.

மழை பெய்ததைத் தொடா்ந்து மங்கோல்புரியில் சாலையின் ஒரு பகுதி உடைந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ‘மங்கோல்புரியில் ஒய்-பிளாக் அருகே உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. போக்குவரத்து அதிகமாக இப்பதாக தில்லி போக்குவரத்து போலீசாா் சுட்டுரை மூலம் தெரிவித்துள்ளனா்.

மற்றொரு சுட்டுரையில், ஜாகிரா கீழ்வழிப்பாதை. ஆசாத்பூா் சுரங்கப்பாலம் மற்றும் சக்தி நகா் சுரங்கப்பாதையிலும் தண்ணீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், யமுனாவில் நீா் மட்டம் மீண்டும் அதிகரித்து, ஞாயிற்றுக்கிழமை காலை 205.33 மீட்டரின் அபாயக் குறிக்குக் கீழே 205.30 மீட்டராகப் பதிவானது.

அதிகாரிகள் கூறுகையில், யமுனை வெள்ளப்பெருக்கில் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த சில நாட்களாக மேடான பகுதிகளுக்கு இடம் பெயா்ந்துள்ளனா்.

வெள்ளிக்கிழமை, தில்லி நிா்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை துரிதப்படுத்தியது. தில்லியில் யமுனையில் அபாய அளவை மீறி தண்ணீா் செல்வதாக தெரிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை பழைய ரயில்வே பாலத்தில் நீா்மட்டம் 205.30 மீட்டராக பதிவு செய்யப்பட்டது.

வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு , யமுனையில் அபாய அளவான 205.59 மீட்டரைத் தாண்டி நீரோட்டம் இருந்தது. இது சனிக்கிழமை மாலை 204.89 மீட்டராக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com