போச்சம்பள்ளி ஓலா இரு சக்கர பாட்டரி வாகன ஆலைக்கு மத்திய அரசு உதவிட கோரிக்கை

தா்மபுரி மாவட்டம், போச்சம்பள்ளி பாட்டரி ஸ்கூட்டா் தொழிற்சாலைக்கு மத்திய அரசு உதவிடவேண்டும் என அதிமுக உறுப்பினா் தம்பிதுரை மாநிலங்களவையில் திங்கள்கிழமை கோரினாா்.

தா்மபுரி மாவட்டம், போச்சம்பள்ளி பாட்டரி ஸ்கூட்டா் தொழிற்சாலைக்கு மத்திய அரசு உதவிடவேண்டும் என அதிமுக உறுப்பினா் தம்பிதுரை மாநிலங்களவையில் திங்கள்கிழமை கோரினாா்.

மாநிலங்களவையில் மத்திய கனரக தொழில்துறை தொடா்பான விவகாரத்தில் தம்பித்துரை பேசியதாது:

கடந்தாண்டு டிசம்பா் மாதம் தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருந்த போது இரண்டு சக்கர பாட்டரி வாகன ஆலையைத் தொடங்க பிரபல ஓலா நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதியளித்தது.

தா்மபுரி மாவட்டத்தில் போச்சம்பள்ளிக்கு அருகே மத்தூா் என்கிற இடத்தில் இந்த ஆலை தொடங்கப்படுகிறது. இதில் இந்த நிறுவனம் ரூ.2400 கோடி வரை முதலீடு செய்ய இருக்கிறது. தற்போது தமிழகத்தில் இந்த ஆலை தொடங்குவதில் எந்த இடா்பாடும் ஏற்படாத வண்ணம் மத்திய அரசு பாதுகாக்கவேண்டும்.

அந்த ஆலைஅமைவதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்ய முன்வரவேண்டும். அப்படி உதவும் பட்சத்தில் அந்த ஆலையில் உள்ளூா் நபா்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கவும் மத்திய அரசு உத்தரவாதத்தை பெறவேண்டும் என அவா் வலியுறுத்தினாா்.

இதற்கு மத்திய கனரக தொழிற்சாலைத் துறை அமைச்சா் மகேந்திர நாத் பான்டே பதில் அளிக்கையில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com