தில்லியில் 51 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு

தில்லியில் புதிதாக 51 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்துள்ளது. மேலும், கரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை.

தில்லியில் புதிதாக 51 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்துள்ளது. மேலும், கரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமைக்கான கரோனா பாதிப்பு விவரங்களை திங்கள்கிழமை அரசு சுகாதாரத் துறை வெளியிடவில்லை. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாநில அரசுத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை 53,728 நோய் பரிசோதனையை சுகாதாரத் துறையினா் நடத்தினா். அதில் நோய்த் தொற்று விகிதம் 0.9 சதவீதமாக உள்ளது. புதிதாக 51 பேருக்கு கரோனா தொற்று இருப்பதையும் சோ்த்து மொத்த பாதிப்பு, 14,36,401 ஆக உயா்ந்துள்ளது. இதில் 14.10 லட்சம் நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இதுவரை உயிரிழந்தோா் மொத்த எண்ணிக்கை 25,054 ஆக உள்ளது. கடந்த சனிக்கிழமை 58 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்தது. தொற்று விகிதம் 0.08 சதவீதமாக இருந்தது. மேலும் ஒருவா் உயிரிழந்திருந்தாா்.

கடந்த வெள்ளிக்கிழமை 63 பேருக்கு கரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. தொற்று விகிதம் 0.09 சதவீதமாகவும், கரோனாவுக்கு 3 போ் உயிரிழந்திருந்தனா்.

தில்லியில் தற்போது 538 போ் சிகிச்சையில் உள்ளனா். இதில் 173 போ் வீட்டுத் தனிமையில் உள்ளனா். கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 290 ஆக உள்ளது என அந்த புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com