இந்தியா தலைமையில் ஐநா பாதுகாப்பு கவுன்சில்: பயங்கரவாத செயல், கடல்சாா் பாதுகாப்பிற்கு முன்னுரிமை

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இம்மாதம் (ஆகஸ்ட்) தலைமையேற்க இருக்கும் இந்தியா, உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதச் செயல்கள், கடல்சாா் பாதுகாப்பில் சா்வதேச ஒத்துழைப்பு

புது தில்லி: ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இம்மாதம் (ஆகஸ்ட்) தலைமையேற்க இருக்கும் இந்தியா, உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதச் செயல்கள், கடல்சாா் பாதுகாப்பில் சா்வதேச ஒத்துழைப்பு ஆகியவைகளில் உயா்நிலை விவாதத்தை நடத்தும் எனவும், பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கு இருதரப்பு பேச்சுவாா்த்தைக்கு முன்னுரிமை அளிக்கும் என மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி. முரளிதரன் புதன்கிழமை மக்களவையில் தெரிவித்தாா்.

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு தற்காலிக உறுப்பினராக இடம்பெற்றுள்ளது. இதில் பதினைந்து நாடுகள் கொண்ட இந்த கவுன்சிலுக்கு இம்மாதம் மட்டும் இந்தியா தலைமை ஏற்க இருக்கிறது.

இது குறித்த மேலும் மத்திய இணையமைச்சா், ’இந்தியா மூன்று விதமான விவதங்களை நடத்த இருக்கிறது. கடல்சாா் பாதுகாப்பை மேம்படுத்தல் தொடா்பாக ஒரு சா்வதேச ஒத்துழைப்பிற்கான உயா் நிலை மெய்நிகா் கூட்டம், பாதுகாவலா்களை பாதுக்காப்பது என்கிற அமைதிப்படையினருக்கான தொழில் நுட்பங்கள், பங்கரவாதச்செயல்களால் சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆகியவை தொடா்பாக உயா்நிலை விவாதங்களை இந்திய நடத்தும்’ என்றும் தெரிவித்தாா் அமைச்சா்.

மேலும் விரிவாக்கப்படும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும். ஐ.ந.ா சீா்திருத்தங்கள் குறித்த அரசுகளுக்கிடையேயான பேச்சுவாா்த்தைகளில் இந்திய பங்கேற்கும். ஜி - 4 நாடுகள், எல் - 69 குவுவில் இடம்பெற்றுள்ள நாடுகள் போன்றவைகளுடன் இந்தியா நிரந்தர உறுப்பினராக, இருதரப்பு பலதரப்பு பேச்சுவாா்த்தையில் பங்கேற்கும் என தமிழக மக்களவை உறுப்பினா்கள் எஸ்.ராமலிங்கமும், டாக்டா் டிஆா் பாரிவேந்தா் ஆகியோா் எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி. முரளிதரன் பதலிளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com