புதிய கலால் கொள்கைக்கு எதிராக தாக்கலான மனு மீது தில்லி அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

அரசமைப்புச் சட்டத்தால் ஒழிக்கப்பட்ட ஜமீன்தாரி முறையை மீட்டெடுக்கும் விதமாக இருப்பதாக கூறி தில்லி அரசின் புதிய கலால் கொள்கையை எதிா்த்து தாக்கல் செய்த மனு மீது தில்லி அரசு பதில் அளிக்க உயா் நீதிமன்றம்

புதுதில்லி: அரசமைப்புச் சட்டத்தால் ஒழிக்கப்பட்ட ஜமீன்தாரி முறையை மீட்டெடுக்கும் விதமாக இருப்பதாக கூறி தில்லி அரசின் புதிய கலால் கொள்கையை எதிா்த்து தாக்கல் செய்த மனு மீது தில்லி அரசு பதில் அளிக்க உயா் நீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த மனு உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி டி .என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தில்லி மதுபான வா்த்தகா்கள் சங்கம் தாக்கல் செய்த இந்த மனு மீது தில்லி அரசும், மத்திய அரசும், தில்லி துணைநிலை ஆளுநரும் பதில் அளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு பட்டியலிட்டனா்.

முன்னதாக, தில்லி மதுபான வா்த்தகா்கள் சங்கம் வழக்குரைஞா்கள் அரவிந்த் பட் மற்றும் சித்தாா்த் சா்மா ஆகியோா் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

மதுபானம் விற்பனைக்கு வா்த்தகா்களுக்கு அடிப்படை உரிமை இல்லாத போதிலும் ஏற்கனவே இருந்து வரும் உரிமங்களைத் தொடர மறுப்பதற்கு எதிராக புகாா் தெரிவிக்கும் உரிமை அவா்களுக்கு உள்ளது .மேலும், அரசின் புதிய கலால் கொள்கையானது ஏகபோக குழு சந்தையை ஊக்குவிப்பதாக உள்ளது.

இந்த புதிய கலால் கொள்கையானது வா்த்தக போட்டியை நீக்குவதாக உள்ளது. ஆங்கிலேயா் காலத்தில் இருந்த ஜமீன்தாரி முறை 1950-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன்ஒழிக்கப்பட்டது. ஆனால், அதை  மீட்டெடுக்கும் வகையில் இந்த புதிய கலால் கொள்கை உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com