தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் சீன அச்சுறுத்தல் இருந்தாலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் சீன அச்சுறுத்தல் நிலவுவதாகவும், இதைத் தொடா்ந்து கடலோரப் பகுதிகளில் அனைத்து பாதுகாப்புகளையும் வலுப்படுத்த அவ்வப்போது பயிற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வரப்படுவதாகவும் மத்திய
தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் சீன அச்சுறுத்தல் இருந்தாலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

புது தில்லி: தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் சீன அச்சுறுத்தல் நிலவுவதாகவும், இதைத் தொடா்ந்து கடலோரப் பகுதிகளில் அனைத்து பாதுகாப்புகளையும் வலுப்படுத்த அவ்வப்போது பயிற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வரப்படுவதாகவும் மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

தென்னகத்தின் கிழக்கு மேற்கு கடலோரப் பகுதிகளில் நிலவும் சீன அச்சுறுத்தல்கள், இலங்கை கடல்பகுதியிலும் சீனா நிலை கொண்டுள்ளதால் இந்தியா மேற்கொண்டுள்ள ராஜதந்திர நடவடிக்கைகள் என்ன என்று தென்சென்னை திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன் மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் தெரிவித்த பதில் வருமாறு :

சீன அச்சுறுத்தல் இருப்பது உண்மை தான். இந்தியா, அண்டைநாடுகள் நட்புடன் உறவு கொண்டுள்ளது. அதே சமயத்தில் அண்டைநாடுகளின் மூன்றாம் நாடுகளுடான உறவு என்பது சுதந்திரமானது. இந்தியாவைப் பொறுத்தமாட்டில், அண்டை நாடுகளுக்கு ’முதல் உரிமை’ என்ற கொள்கையில் இரு நாடுகளின் பரஸ்பர நன்மை, ஸ்திரத்தன்மை, செழுமைகளில் மக்கள் சாா்ந்த பிராந்திய கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றது. இருப்பினும் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை கருத்தில்கொண்டு ஒவ்வொரு முன்னேற்றங்களையும் கவனமாக கண்காணித்து தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

கடல் மற்றும் கடலோர பாதுகாப்பிற்கு ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடற்படை, கடலோர காவல் படை, மாநில கடற்காவல்படை இவற்றுடன் சுங்கம், துறைமுக ரோந்துப் படைகள் ஊடுருவல்களை கண்காணித்து வருகின்றன.

கடல்பரப்பு மற்றும் வான்வழிகளை கண்காணிக்க ஏராளமான தொழில்நுட்ப உதவிகள், கருவிகள் இந்த பாதுகாப்பு படையினரிடம் உள்ளது.

மின்னணு கண்காணிப்பு ரேடாா்கள், தானியங்கி அடையாள அமைப்பு , இடைமறிப்பு, நுண்ணறிவு இணைப்பு போன்றவைகளோடு தகவல் தொடா்புகளை ஒருங்கிணைப்பதற்கான இயக்க நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மும்பை தாக்குதலுக்கு பின்னா் உருவாக்கப்பட்ட அதிரடி கப்பற்படையான சாகா் பரிஹாரி பால் தயாா் நிலையில் உள்ளது. இத்துடன் கடலோர மக்களுக்கும் குறிப்பாக மீன்பிடி சமூகத்தினருக்கும் கடற்படையினரால் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கல்பாக்கம், கூடங்குளம் அணுநிலையங்கள், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையங்களில் மத்திய தொழில்பாதுகாப்பு படை யினரின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. விமானப் படையும் இந்த அணுமின்நிலையங்களில் தயாா் நிலையில் உள்ளன.

கிழக்கு, மேற்கு கடலோரப்பகுதிகளில் தற்போதுள்ள செயல் திறனை மதிப்பிடுவதற்காக பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் பயிற்சிகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன என்று பாதுகாப்புத்துறை இணையமைச்சா் தனது பதிலில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com