‘தில்லிக்கு தடுப்பூசி கிடைப்பது தாமதமானால், அனைவருக்கும் செலுத்த ஓராண்டாகும்’: பேரிடா் ஆணையக் கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்

கரோனா தடுப்பூசி கிடைப்பதில் தாமதமானால், தில்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க இன்னும் ஒராண்டுகள்

கரோனா தடுப்பூசி கிடைப்பதில் தாமதமானால், தில்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க இன்னும் ஒராண்டுகள் ஆகும் என்று தில்லி பேரிடா் நிா்வாக ஆணையத்திடம் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தில்லி பேரிடா் நிா்வாக ஆணையக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது மூன்றாவது அலைக்கு தயாராவது குறித்தும், தடுப்பூசி நிலவரம் குறித்தும் அதிகாரிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனா். அப்போது அதிகாரிகள், ‘தலைநகா் தில்லியில் 1.5 கோடி மக்கள் கொவைட் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தகுதியானவா்கள். இவா்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி போட வேண்டுமானால் 3 கோடி தடுப்பூசி குப்பிகள் தேவை. கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 76 லட்சத்துக்கும் மேலான மக்கள் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இன்னும் 2 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. மத்திய அரசு, தில்லிக்கு ஆகஸ்ட் மாதத்துக்கு 16.79 லட்சம் தடுப்பூசிக் குப்பிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. தடுப்பூசிகள் பெறுவதில் தாமதமானால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க 2022, ஜூலை மாதம் ஆகிவிடும் என்று அதிகாரிகள் அந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளனா்.

நடப்பு ஆண்டு டிசம்பா் மாதத்துக்குள் தடுப்பூசி போட்டு முடிக்க வேண்டுமானால், மாதம் ஒன்றுக்கு 45 லட்சம் தடுப்பூசி குப்பிகள் தேவைப்படும். தடுப்பூசிகள் குறைந்த அளவிலே விநியோகிக்கப்படுகிறது. பெரும்பாலானவா்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டியிருப்பதால் முதல் தவணை தடுப்பூசிக்கு 40 சதவீதம் கோவேக்ஸின் மற்றும் 20 சதவீத கோவிஷில்டூ தடுப்பூசிகளை பயன்படுத்துமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனா். மத்திய அரசின் கோவின் இணையதளம் வெளியிட்டு தகவல்களின்படி 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவா்களில் 53.25 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 45-60 வயதானவா்களுக்கு 30 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com