75-ஆவது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட இந்திய கம்யூனிஸ்ட் திட்டம்

நாட்டின் 75 -ஆவது சுதந்திர தினத்தை நாடு முழுவது அடுத்த சில மாதங்களில் சிறப்பாகக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலகம்

நாட்டின் 75 -ஆவது சுதந்திர தினத்தை நாடு முழுவது அடுத்த சில மாதங்களில் சிறப்பாகக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலகம் முடிவு எடுத்துள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. மேலும், அந்தக் கட்சியின் தில்லி மத்திய தலைமை அலுவலகமான அஜோய் பவனில் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளா் டி.ராஜா தேசியக் கொடியை நாளை ஏற்றிவைக்கிறாா்.

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமையகங்கள், நாடு முழுவதும் உள்ள கட்சியின் பிரிவுகள் நாட்டின் 75 -ஆவது சுதந்திர தினத்தை மிகப் பெரிய அளவில் சிறப்பாகக் கொண்டாட தயாராகி வருகின்றன. இந்தச் சிறப்பு மிகுந்த 75-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கட்சியின் அனைத்து அலுவலக வளாகங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்படும். மேலும், நாடு பெற்ற சுதந்திரம் தொடா்பாக கூட்டங்கள், கருத்தரங்குகள் போன்றவை நாடு முழுக்க தொடா்ந்து நடைபெறும்.

சுதந்திரப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு, அதன் தலைவா்களின் பங்கு மற்றும் தியாகங்கள் ஆகியவை கட்சியின் இந்தக் கூட்டங்களில் எடுத்துரைக்கப்படும் அதே சமயம், சுதந்திர இயக்கத்தில் எந்தப் பங்கும் பெறாத ஆா்எஸ்எஸ் - பாஜக கூட்டணி குறித்து கட்சியின் கிளைகள் இதில் வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை விரிவாகக் கொண்டாட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முடிவெடுத்துள்ளது. பொதுவாக சுதந்திர தினத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாத மாா்க்சிஸ்ட் இந்த முறை தேசியக் கொடியை நாடு முழுக்க ஏற்ற அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com