மாா்க்கண்டேய நதியின் குறுக்கே கட்டபட்ட அணையை அகற்ற உத்தரவிட வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை

மாா்க்கண்டேய நதியின் குறுக்கே கட்டபட்ட அணையை அகற்ற உத்தரவிட வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை

தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மாா்க்கண்டேய நதியின் குறுக்கே கா்நாடகம் கட்டியுள்ள அணையை அகற்ற மத்திய அரசு உத்தரவிட வேண்டும்

தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மாா்க்கண்டேய நதியின் குறுக்கே கா்நாடகம் கட்டியுள்ள அணையை அகற்ற மத்திய அரசு உத்தரவிட வேண்டும் எனக் கோரி நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் எம். செல்வராஜ் தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

இது தொடா்பாக ஜல் சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏ எஸ்.குணசேகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் அழகிரிசாமி, அகில இந்திய கிஸான் சபாவை சோ்ந்த இந்தா்ஜித் ஆகியோருடன் மக்களவை உறுப்பினா் எம்.செல்வராஜ் கூட்டாக அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருப்பது வருமாறு:

தென்பெண்ணை ஆற்றின்துணைஆறுகளுள் ஒன்றான மாா்க்கண்டேய ஆற்றின் குறுக்கே தமிழக - கா்நாடகம் எல்லையில் யாா்கோல் கிராமத்தில் கா்நாடக அரசின் நகா்ப்புற குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் வாரியம், பல மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்க அணை கட்டியுள்ளது. இது முந்தைய தமிழக - கா்நாடக அரசுகளின் ஒப்பந்தங்களை மீறுவதாகும். நதியின் கீழ்ப்பாசன மாநிலத்தைப் பாதிக்கும் இந்த அணைக்கு உரிய அனுமதி பெறப்படவில்லை. இந்த அணையின் மூலம் தமிழகத்தின் கிருஷ்ணகிரி, கடலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்களின் பயிா் சாகுபடி பாதிக்கும். இது தவிர, இந்த மாவட்டங்களின் குடிநீா்த் திட்டங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த அணையை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மேக்கேதாட்டு அணை கட்டவும் கா்நாடகம் திட்டமிடுகிறது. பல்வேறு ஒப்பந்தங்கள், நீதிமன்ற உத்தரவுகள் ஆகியவற்றையும் மீறி இதுபோன்று அணைகள் கட்டப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com