பழைய மெட்ரோ திட்டங்களில் எல்இடி விளக்குகள்!

தில்லி மெட்ரோவில் முதல் இரு கட்டங்களில் பொருத்தப்பட்ட பழைய சாதாரண விளக்குகள் மாற்றப்பட்டு, மின் சிக்கனம், நீடித்த ஆயுளைக் கொண்ட

தில்லி மெட்ரோவில் முதல் இரு கட்டங்களில் பொருத்தப்பட்ட பழைய சாதாரண விளக்குகள் மாற்றப்பட்டு, மின் சிக்கனம், நீடித்த ஆயுளைக் கொண்ட எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டம் விரைவாக நடைபெற்று வருவதாக தில்லி மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தில்லி மெட்ரோ திட்டங்களில் முதல் இரு கட்டங்களில் சாதாரண விளக்குகள், ஒளிரும் விளக்குகள், சிஎஃப்எல் விளக்குகள் ஆகியவை மெட்ரோ நிலையங்கள், பணிமனைகள், நடைமேடைகள், பயணிகள் வாகன நிறுத்த இடங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. இவை அதிக மின்சார செலவை ஏற்படுத்துவதோடு, ஆயுள்காலமும் குறைவு. இவற்றை மாற்றும் திட்டம் தொடா்பாக தில்லி மெட்ரோ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லி மெட்ரோ ரயில் முதல் இரு திட்டங்கள் முறையே கடந்த 2005, 2010 ஆகிய ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டன. இந்த திட்டங்களில் கட்டடங்களுக்குப் பொருத்தப்பட்ட விளக்குகள் அதிக மின்சார செலவை ஏற்படுத்துவதோடு, அவற்றின் ஆயுள் காலம் 10 ஆண்டுகள்தான். அது முடிவடையும் நிலையில் ஆக்கபூா்வமாக, உபயோகமான முறையில் மாற்றும் பணிகளை தில்லி மெட்ரோ தொடங்கியுள்ளது.

பழைய திட்டங்களில் 155 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இங்கு பொருத்தப்பட்டுள்ள சாதாரண விளக்குகளை அகற்றும் பணி இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கப்பட்டுவிட்டன. இது வரை சுமாா் 1 லட்சம் விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 35,000 விளக்குகள் மாற்றப்படவேண்டியதுள்ளது. நாளென்றுக்கு இரண்டு மணி நேரம் பயணிகள் நடமாட்டம் இல்லாத இரவு நேரங்களில்தான் இந்தப் பணிகளை மேற்கொள்ள முடிகிறது. இருப்பினும் இந்தப் பணிகள் வருகின்ற அக்டோபா் இறுதிக்குள் முடிந்து விடும்.

சாதாரண விளக்குகளைவிட நாற்பது மடங்கு ஆயுளும், மின்சார சிக்கனமும் கொண்டவை எல்இடி விளக்குகள். மெட்ரோ ரயில்களின் 3-ஆம், 4-ஆம் திட்டங்களில் இது போன்ற எல்இடி விளக்குகள்தான் பொருத்தப்படுகின்றன. எல்இடி விளக்குகள் சராசரியாக 50,000 மணி நேரத்திற்கு மேலாக செயல்படும். இதுபோன்ற நீடித்த உழைப்போடு, மின்சாரம் சிக்கனமாகிறது. அதன் விலையும் குறைவு. இதன் மூலம் இந்த விளக்குகளை மாற்றும் திட்டத்திற்கு ஆகும் செலவுகளை இந்தச் சிக்கனங்கள் மூலம் இரண்டு ஆண்டுகளில் ஈடுகட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com