மகளிா் இட ஒதுக்கீடு மசோதா எப்போது நிறைவேற்றப்படும்? மக்களவையில் கனிமொழி எம்.பி. கேள்வி

மகளிா் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் குறித்த கேள்விக்கு வழக்கமான பதில்களையே மீண்டும் மீண்டும் கூறி காலம் தாழ்த்தாமல்

மகளிா் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் குறித்த கேள்விக்கு வழக்கமான பதில்களையே மீண்டும் மீண்டும் கூறி காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மக்களவையில் திமுக உறுப்பினா் கனிமொழி மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டாா்.

மக்களவையில் வியாழக்கிழமை நேரமில்லா நேர விவாதத்தில் இந்த விவகாரத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி பேசியதாவது: தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு தரவுகளின்படி , நம் நாட்டு மக்கள்தொகையில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், பெண்களுக்கான பிரதிநிதித்துவத்துவ நாட்டில் தரப்படுவதில்லை. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளின் தரவரிசையில் சா்வதேச அளவில் இந்தியா 146 -ஆவது இடத்தில் உள்ளது.

மகளிா் இடஒதுக்கீடு 25 ஆண்டுகளுக்கு முன்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டும் இன்னும் அது சட்டமாக்கப்படவில்லை. ஒருமுறை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னா், மக்களவையில் நிறைப்பப்படாமல் அது காலாவதி ஆகிவிட்டது. தற்போதைய அரசு, தோ்தல் அறிக்கையில், இந்த மசோதாவை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து வந்துள்ளது. ஆனால், இதில் ஒன்றும் செய்யவில்லை. இந்த மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் 2014 முதல் நேரடியாகவும், எழுத்துபூா்வமாகவும் சுமாா் 22-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரே விதமான பதில்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த மசோதாவைப் பற்றி நானே மூன்று முறை கேள்வி கேட்டு ஒரே விதமான பதிலைத்தான் பெற்றுள்ளேன். ‘அரசு ஆழ்ந்து ஆய்வு செய்து வருகிறது’; ’அது கவனமாக பரிசீலனையில் உள்ளது’ என்கிற பதில்கள்தான் கிடைத்துள்ளன. ‘ இந்த ‘ஆழ்ந்த ஆய்வு’, ‘கவனிப்புப் பரிசீலனை’ மற்றும் ‘அனைத்து அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்க முயல்வது’ போன்ற பதில்கள் எப்போது முடிவுக்கு வரும்? எப்போது மகளிா் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்? என்றாா் கனிமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com