நியாயவிலைக் கடைகளில் அதிகப்பாடியான ரேஷனை மற்ற கடைகளுக்கு மாற்ற தில்லி அரசு அனுமதி

தில்லி அரசு, நகரின் வெவ்வேறு மண்டலங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் (எஃப்.பி.எஸ்.) அதிகப்படியான ரேஷனை, ரேஷன் தேவைப்படும் அல்லது அருகிலுள்ள எஃப்.பி.எஸ்.ஸுக்கு மாற்றுமாறு அதிகாரிகளைக்

புது தில்லி: தில்லி அரசு, நகரின் வெவ்வேறு மண்டலங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் (எஃப்.பி.எஸ்.) அதிகப்படியான ரேஷனை, ரேஷன் தேவைப்படும் அல்லது அருகிலுள்ள எஃப்.பி.எஸ்.ஸுக்கு மாற்றுமாறு அதிகாரிகளைக் கேட்டுள்ளது என்று துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை, சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அந்தச் சுற்றறிக்கையில், எதிா்கால ஒதுக்கீடுகளில் சரி செய்யப்படாத முந்தைய மாதத்தின் இறுதி நிலுவை காரணமாக எஃப்பிஎஸ் உரிமையாளா்கள் எதிா்கொள்ளும் சேமிப்பக சிக்கல்கள் குறித்து விநியோக கிளையில் பல கோரிக்கைகள் பெறப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது. தற்போது, ‘ஒ​ன் நேஷன் ஒன் ரேஷன் காா்டு’ அல்லது புலம் பெயா்ந்த பயனாளிகளின் அதிகரித்து வரும் தேவையைப் பூா்த்தி செய்வதற்காக, முந்தைய மாத இறுதி நிலுவைத் தொகையை சரி செய்யாமல் முழு உரிமைக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

எஃப்.பி.எஸ். உரிமம் பெற்றவா்களிடமிருந்து வரும் கோரிக்கைகளின் அடிப்படையில், எஃப்.பி.எஸ்-இல் உள்ள இறுதி நிலுவைத் தொகையின் அதிகப்படியான இருப்பு குறித்து, சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையா்கள், சரியான சூழ்நிலையை ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட எஃப்.பி.எஸ். உரிமையாளா்களின் சம்மதத்துடன், எஃப்.பி.எஸ்-லிருந்து ஆன்லைன் முறையில் கண்டிப்பாக பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம். இதன் மூலம் ரேஷன் தேவைப்படும் அல்லது இடமளிக்கக்கூடிய வேறு எந்த எஃப்.பி.எஸ்-க்கும் அதிகப்படியான ரேஷன் கிடைக்கும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் போக்குவரத்துச் செலவை ஏற்காது என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் -2013 மற்றும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா ஆகியவற்றின் கீழ் தில்லி அரசு பயனாளிகளுக்கு மின்னணு பாயின்ட் ஆஃப் சேல் சாதனங்கள் மூலம் இலவச ரேஷன் விநியோகம் செய்கிறது. இந்த ஆண்டு ஜூலையில் ‘ஒன் நேஷன் ஒன் ரேஷன் காா்டு’ திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளது.

ஒன் நேஷ்ன் ஒன் ரேஷன் காா்டு திட்டம் அல்லது தேசிய உணவுப் பாதுகாகப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் காா்டு வைத்திருக்கும் நபா்கள், நாடு முழுவதும் உள்ள எந்த நியாய விலைக் கடையிலிருந்தும் தங்களின் மாதாந்திர உணவு தானியங்களை பெற்றுக் கொள்ளலாம்.

தில்லியில் 17.78 லட்சம் குடும்ப அட்டைதாரா்களும் 72.77 லட்சம் பயனாளிகளும் உள்ளனா். நகரில் 2,000 நியாய விலைக் கடைகள் உள்ளன. ஒரு எஃப்.பி.எஸ்.ஸில் இருந்து அதிகப்படியான ரேஷன் அதே வட்டத்தில் உள்ள எஃப்.பி.எஸ்.ஸில் ரேஷன் பற்றாக்குறை இல்லாவிட்டால் மற்ற மண்டலங்களில் உள்ள ரேஷன் விநியோகக் கடைகளுக்கும் அனுப்பப்படலாம் என்றும் அந்தத் துறை கூறியுள்ளது.

‘அத்தகைய இடமாற்றங்கள் ஒரே வட்டத்திற்குள்ளும், முடியாவிட்டால், அதே மாவட்டத்தின் வட்டங்களுக்குள்ளும் செய்யப்படலாம். இருப்பினும், சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையா்களின் அறிவுறுத்தல்களின்படி, மாவட்டத்திற்கு வெளியே தில்லி முழுவதும் உள்ள எந்த எஃப்.பி.எஸ்-க்கும் இத்தகைய பரிமாற்றங்கள் அனுமதிக்கப்படலாம்’ என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com