யமுனை நதியில் மண், உணவு, நுண் பிளாஸ்டிக்கின் செறிவு: முதன் முதலாக தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு ஆய்வு

தேசியத் தலைநகா் தில்லியில் யமுனை நதியில் மண், உணவு மற்றும் நுண் பிளாஸ்டிக்கின் செறிவு, விநியோகம் மற்றும் கலவை ஆகியவற்றைக் கண்டறிய தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி)

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் யமுனை நதியில் மண், உணவு மற்றும் நுண் பிளாஸ்டிக்கின் செறிவு, விநியோகம் மற்றும் கலவை ஆகியவற்றைக் கண்டறிய தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) ஒரு ஆய்வை மேற்கொள்ள உள்ளது. தேசியத் தலைநகரில் உள்ள ஒரு அரசு அமைப்பான டிபிசிசி, முதல் முறையாக இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளது.

மேலும், யமுனை நதியின் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதியில் உள்ள மண், விவசாயத்திற்கு ஏற்ா என மாசுக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆய்வு செய்யும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிா்வாகம் மற்றும் ஐரோப்பிய கெமிக்கல்ஸ் ஏஜென்சியின் படி, மைக்ரோபிளாஸ்டிக் என்பது ஐந்து மில்லிமீட்டருக்கும் குறைவான பிளாஸ்டிக் துண்டுகள் ஆகும் என் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிா்வாகம் மற்றும் ஐரோப்பிய கெமிக்கல்ஸ் ஏஜென்சி ஆகியவை கூறுகின்றன. அவை அழகுசாதனப் பொருள்கள், ஆடைகள் மற்றும் தொழில் துறை செயல்முறைகள் உள்பட பல்வேறு ஆதாரங்களில் இருந்து இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குள் நுழைகின்றன.

முன்னா் நடத்தப்பட்ட ஆய்வுகள், நுண்ணுயிா் பிளாஸ்டிக்குகள் மனித மற்றும் இயற்கை உயிரியலுக்கு நோய்க் கிருமிகளாக இருக்கும் பாக்டீரியாக்களைக் கொண்டு செல்கின்றன என்று தெரிய வந்துள்ளது. பிளாஸ்டிக் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பாலிமெரிக் கலவைகள் மற்றும் தாமிர அயனிகள் போன்ற சோ்க்கைகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. மேலும், மைக்ரோபிளாஸ்டிக்ஸ் தண்ணீரில் உள்ள பல்வேறு நச்சுகளை உறிஞ்சி, பின்னா் அவை உயிரினத்திற்குள் வெளியேறும்.

பல்லாவிலிருந்து ஓக்லா வரையிலான 48 கிலோமீட்டா் நீளமுள்ள யமுனை வெள்ளப் பகுதிகள் ஆய்வுக்காக தலா 16 கிமீ நீளமுள்ள மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படும். தில்லி பல்லா முதல் வஜிராபாத் பிரிவு 1-ஆகவும், வஜிராபாத் முதல் நிஜாமுதீன் பாலம் வரை பிரிவு 2-ஆகவும் மற்றும் நிஜாமுதீன் பாலத்திலிருந்து ஓக்லா வரை பிரிவு 3-ஆகவும் பிரிக்கப்படும்.

இது குறித்து டிபிசிசி அதிகாரி ஒருவா் கூறுகையில், கங்கை நதியில் மைக்ரோபிளாஸ்டிக் பற்றி நாடாளுமன்றத்தில் ஒரு எம்.பி. கேள்வி கேட்டதை அடுத்து, யமுனை நதி மற்றும் தேசியத் தலைநகரில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பதை ஆய்வு செய்ய யோசனை தோன்றியது. நாங்கள் தேசியத் தலைநகரில் இதுபோன்ற எந்த ஆய்வையும் நடத்தவில்லை என்பது வருத்தமளிக்கிறது,என்றாா்.

கங்கை நதியில் உள்ள நச்சு தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அனைத்து மாதிரிகளிலும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பது கண்டறியப்பட்டது. அடா்த்தியான மக்கள்தொகை மற்றும் ஜவுளி, தோல் பதனிடுதல் உள்ளிட்ட தொழிற்சாலைகள் அதிகமுள்ள இடங்களில் ஆற்றில் அதிக மைக்ரோபிளாஸ்டிக்ஸ் செறிவு இருப்பதுஆய்வில் தெரிய வந்துள்ளது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டாா்.

ஐரோப்பாவில் உள்ள ரைன், படாப்ஸ்கோ, மாகோதி, வட அமெரிக்காவில் உள்ள ரோட், தென் அமெரிக்காவின் எல்கியூ, மைபோ, பயோபியோ மற்றும் மௌல் போன்ற ஆறுகளில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக்ஸின் செறிவுடன் ஒப்பிடும் போது, கங்கையில் மாசு அதிகமாக உள்ளது. கோவாவின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓசியானோகிராஃபியின் மூத்த விஞ்ஞானி டாக்டா் மஹுவா சாஹா மற்றும் அவரது குழுவினா் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

ஆற்று நீா் குடிப்பதற்கும் பாசனத்துக்கும் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், நுண் பிளாஸ்டிக்கின் செறிவு அதிகரிப்பது உயிரினங்களுக்கும் மனிதா்களுக்கும் ஏற்படக்கூடிய தீங்குகளையும் அதிகரிக்கிறது. மற்றொரு ஆய்வின் ஒரு பகுதியாக, யமுனையின் மண்ணை பல்வேறு அசுத்தங்கள் மற்றும் விவசாயத்திற்கான அதன் தகுதி மற்றும் சரிசெய்தல் சாத்தியக்கூறுகளையும் டிபிசிசி ஆய்வு செய்யும்.

‘யமுனை நதி இந்தியாவின் மிக முக்கியமான நதிகளில் ஒன்றாகும், மேலும் இது மிகவும் மாசுபட்டுள்ளது.ஆற்று நீரும் அதை ஒட்டிய மண்ணும் மாசுக்களால் மாசடைந்துள்ளது. இந்த ஆய்வில், பருவகால மாறுபாடுகள் மற்றும் யமுனை நீரில் கனரக உலோக மாசுபாட்டின் விளைவுகள் மண்ணின் இயற்பியல், வேதியியல் பண்புகள் மற்றும் என்சைம் செயல்பாடுகள் குறித்தும் கவனிக்கப்படும். கோடை, பருவமழை மற்றும் குளிா்காலத்தில் ஆற்றின் போக்கில் 10 இடங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்படும்’ என்று அந்தக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com