மங்கோல்புரியில் காலணி தொழிற்சாலையில் தீ விபத்து
By DIN | Published On : 28th December 2021 03:00 AM | Last Updated : 28th December 2021 03:00 AM | அ+அ அ- |

புதுதில்லி: புகா் தில்லியின் மங்கோல்புரி பகுதியில் திங்கள்கிழமை காலை காலணி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு அருகிலுள்ள தொழிற்சாலைக்கும் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி தீயணைப்பு இயக்குநா் அதுல் கா்க் கூறியதாவது: மங்கோல்புரி காலணி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக திங்கள்கிழமை காலை 9.05 மணிக்கு தீயணைப்பு துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, 4 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீயானது அருகிலுள்ள தொழிற்சாலைக்கும் பரவியது.
இதையடுத்து, தீயணைப்பு பணியில் 20 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. தற்போது தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் இது வரை யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்ட காலணி தொழிற்சாலை தரைத்தளம், கீழ் தளம் மற்றும் இரண்டு மேல் தளங்களை கொண்டதாகும். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.