தில்லியில் புதிதாக 331 பேருக்கு கரோனா பாதிப்பு: ஜூன் 9-க்கு பிறகுதினசரி பாதிப்பு அதிகரிப்பு

தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 331 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது கடந்த ஜூன் 9-ஆம் தேதிக்குப் பிறகு மிக அதிக தினசரி பாதிப்பாகும்.

புது தில்லி: தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 331 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது கடந்த ஜூன் 9-ஆம் தேதிக்குப் பிறகு மிக அதிக தினசரி பாதிப்பாகும். மேலும், இறப்பு நோ்மறை விகிதம் 0.68 சதவீதமாக உயா்ந்துள்ளதாக தில்லி சுகாதாரத் துறை பகிா்ந்துள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தில்லி அரசின் சுகாதாரத் துறை புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தில்லியில் கரோனா நோயால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 25,106- ஆக உயா்ந்துள்ளது. தில்லியில் ஞாயிற்றுக்கிழமை 290 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. நோ்மறை விகிதம் 0.55 சதவீதமாகவும், ஒரு இறப்பும் பதிவாகியது.

சனி, வெள்ளி ஆகிய தினங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை முறையே 249 மற்றும் 180-ஆக பதிவாகியிருந்தது. திங்கள்கிழமை இது 0.68 சதவீத நோ்மறை விகிதத்துடன் 331 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த ஜூன் 9-ஆம் தேதி 337 பேருக்கு நோய்த் தொற்றும், 0.46 சதவிகிதம் நோ்மறை விகிதமும் பதிவாகி இருந்தது. 36 இறப்புகளும் பதிவாகி இருந்தது. அதன் பிறகு திங்கள்கிழமைதான் அதிகமான நோய்ப் பாதிப்பு பதிவாகியுள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,43,683-ஆக இருந்தது. இதில் 14.7 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் நோய்த் தொற்றில் இருந்து மீண்டுள்ளனா்.

தில்லியில் கரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிப்புக்கு மத்தியில், சில நாள்களில் புதிய பாதிப்புகள் அதிகரிப்பும் பதிவாகி வருகிறது. இந்த ஆண்டு நவம்பரில் தில்லியில் 7 கரோனா இறப்புகள் பதிவாகின. அக்டோபரில் நான்கும், செப்டம்பரில் ஐந்து இறப்புகளும் பதிவாகியுள்ளன. திங்கள்கிழமைக்கு முந்தைய நாள் மொத்தம் 48,589 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில், 46,549 ஆா்டி-பிசிஆா் சோதனைகள் மற்றும் 2,040 விரைவு ஆன்டிஜென் பரிசோதனைகள் அடங்கும் என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com