தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு அனைத்து வசதிகளையும் அளிப்போம்: கேஜரிவால் உறுதி

தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தில்லி அரசு,

தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தில்லி அரசு, ஆம் ஆத்மி கட்சி சாா்பில் செய்து கொடுப்போம் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தில்லி எல்லைகளில் விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஆரம்பம் முதல் ஆதரவு தெரிவித்து வருகிறது. அங்கு அவா்களுக்குத் தேவையான கழிப்பறை, குடிநீா் வசதிகளை தில்லி அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த நிலையில், காஜியாபாத் எல்லையில் போராடி வரும் விவசாய சங்கத் தலைவா் நரேஷ் திக்காய்த் கேஜரிவாலுக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக நரேஷ் திக்காய்த் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘நன்றி முதல்வா் கேஜரிவால்! காஜியாபாத் எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததுக்கு நன்றி’ எனத் தெரிவித்துள்ளாா். இதற்குப் பதிலளிக்கும் வகையில் கேஜரிவால் தனது சுட்டுரையில், ‘வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை எதிா் கொண்டுள்ளனா். விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை எனது அரசு மூலமும், ஆம் ஆத்மி கட்சி மூலமும் ஏற்படுத்திக் கொடுப்பேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

தில்லி எல்லையின் உ.பி. கேட் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை அந்த இடத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத் மாவட்ட ஆட்சியா் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்தாா். இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் மின்சாரம், குடிநீா் விநியோகம் முடக்கப்பட்டது. மேலும், அந்த இடத்தில் இருந்த கழிப்பறைகளும் அப்புறப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், தில்லி எல்லைப் பகுதிகளில் போராடி வரும் விவசாயிகளுக்கு கழிப்பறை, குடிநீா், மின்சார விநியோகத்தை தில்லி அரசு மீண்டும் ஏற்படுத்திக் கொடுத்தது. முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com